சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?

சிவனுக்கு அபிஷேகங்கள் நடக்கும். அப்போது தேன், இளநீர், பால், பழம், பன்னீர் என பலவித பொருள்களால் அபிஷேகம் நடக்கும். எந்தப் பொருள்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்க்கலாமா… அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால்…

சிவனுக்கு அபிஷேகங்கள் நடக்கும். அப்போது தேன், இளநீர், பால், பழம், பன்னீர் என பலவித பொருள்களால் அபிஷேகம் நடக்கும். எந்தப் பொருள்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்க்கலாமா…

அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும். நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் தீர்க்காயுள், ஆரோக்கியம் உண்டாகும். .பசும்பால் அபிஷேகத்தினால் சகல சௌக்கியம் கிட்டும். தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், புகழ், கௌரவம், கீர்த்தி, செல்வாக்கு உண்டாகும். பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன விருத்தி கிட்டும். மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் விலகும். தேன் அபிஷேகத்தினால் தேஜஸ் அதிகரிக்கும்  புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் காரியத்தில் வெற்றி கிடைக்கும். லாபம் உண்டாகும். இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும். உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் தீரும்.  அரைத்தெடுத்த சந்தனத்தினால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும். தங்க ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பணப் பற்றாக்குறை தீரும். ஸுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப கிடைக்கும்.

வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் கிட்டும். அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும். திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.

பேரிச்சம்பழம் ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் இல்லாமல் போவர்.நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய சித்தி கிட்டும். கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.
நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தானியம், வீடு கட்டும் யோகம் என வளர்ச்சி கிட்டும். மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.