கண்திருஷ்டி அதிகமாக இருக்கும்போது ஆரோக்கியமாக இருப்பவர்களை நோய் தாக்கும். இல்லாவிட்டால் பொருளாதார ரீதியாக பணப்பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படும். எடுத்த காரியமெல்லாம் தோல்வியில் முடியும். இதெல்லாம் குறையணும்னா கண்திருஷ்டியை நீக்க வேண்டும். அதற்கு என்ன பரிகாரம்னு பார்க்கலாமா…
இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி நிறைய மருதாணி விதைகளை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு மருதாணி இலைகளையும் அதில் போட்டுக் கொள்ளுங்கள்.
மருதாணி பூ, வேர் போன்றவை கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லை
என்றால் இலையும் விதையும் இருந்தாலே போதும். இந்த மருதாணி இலை விதையுடன் ஒரு சிறிய கரித்துண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களால் முடிந்தால் வீட்டில் உள்ள விறகு கட்டையை எரித்து கரித்துண்டு எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவை அனைத்தையும் சேர்த்த பிறகு இதை ஒரு முடிச்சாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். -கட்டிய இந்த முடிச்சை நீங்கள் வீட்டில் படுக்கையறையில் எங்காவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். இல்லை என்றால் உங்கள் தலையணை அடியில் கூட இதை வைத்து விடலாம்.அவ்ளோதான். உங்க திருஷ்டி படிப்படியாகக் குறைந்து விடும்.
திருஷ்டிக்கு வெள்ளை பூசணிக்காயை சுற்றி உடைப்பார்கள். இது எதனால் என்றால் நம்மைச் சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகளை உள்ளிழுத்துக் கொண்டு நேர்மறை சக்தியை வெளியிடும் திறன் கொண்டதுதான் வெள்ளைப் பூசணிக்காய். இதைச் சுற்றும்போது இடமிருந்து வலம் 3 சுற்றுகளும், வலமிருந்து இடம் 3 சுற்றுகளும் சுற்றுவர். மேலிருந்து கீழாக 3 முறை சுற்றி கடைசியாக உடைப்பார்கள்.
முதலில் சுற்றத் தொடங்கும்போது அதன் எடை அதிகரிக்கும். அடுத்ததாக அதை விட எடை அதிகரிக்கும். இப்படி தொடர்ந்து அதிகரித்தால் திருஷ்டி இருப்பதாக அர்த்தம் என்பர். அதனால்தான் வெள்ளைப்பூசணியைத் திருஷ்டிக்கு உடைக்கிறார்கள்.