RCB கப் வாங்கினால் லீவு விடுங்க சார்.. முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வெறித்தனமான ரசிகர்..!

  கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த தீவிரமான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர் ஒருவர், IPL 2025 கோப்பையை RCB வென்றால் ஜூன் 3-ம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, முதலமைச்சர் சித்தராமையாவுக்கு…

rcb cup

 

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த தீவிரமான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர் ஒருவர், IPL 2025 கோப்பையை RCB வென்றால் ஜூன் 3-ம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியதையடுத்து சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளார்.

ஷிவானந்த் மல்லன்னவர என்ற ரசிகர் எழுதிய அந்தக் கடிதம் வைரலாகி, RCB ரசிகர்களின் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலித்தது. அந்த கடிதத்தில், “RCB இந்த முறை IPL கோப்பையை வென்றால், ஜூன் 3-ம் தேதியை ‘RCB ரசிகர் திருவிழா’ நாளாக கர்நாடக முழுவதும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இது கன்னட ரஜ்யோத்சவத்தை போல வருடந்தோறும் கொண்டாடப்படும் விழாவாக இருக்கட்டும்,” எனக் கூறியுள்ளார்.

மேலும், மாநிலம் முழுவதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஆதரவுடன் ரசிகர்களுக்காக கொண்டாட்டங்கள் நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். “இந்த வரலாற்றுச் சாதனையை பகிர்ந்து மகிழ ரசிகர்கள் ஒன்று கூடும் வகையில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு தொடரில் RCB சிறப்பாக விளையாடி நீண்ட நாட்களாக கோப்பைக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை அளித்திருக்கிறது. மே 27 அன்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக நடந்த Qualifier 1 போட்டியில் வெற்றி பெற்று, ரஜத் பதீதார் தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. லீக் சுற்றில் 14 போட்டிகளில் 9 வெற்றி பெற்றது.

2008 முதல் ஒரு முறை கூட IPL கோப்பையை வெல்லாமல் RCB, இருந்தாலும், தொடர்ச்சியாக உறுதியுடன் ஆதரவு அளித்து வரும் ரசிகர்களை இழக்கவில்லை. அந்த உணர்வுப் பிணைப்பு, மே 17-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் பெங்களூருவில் நடந்த போட்டி மழையால் ரத்து ஆனபோதும் வெளிப்பட்டது.

அன்று, இந்திய கிரிக்கெட் தாரா மற்றும் முன்னாள் RCB கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு மரியாதை செலுத்த, வெள்ளை நிற No.18 ஜெர்ஸிகளில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மழையிலும் திரண்டனர். ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து ஆனபோதும், ரசிகர்கள் அவருடைய பெயரை அரங்கத்தில் முழக்கமிட்டனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின்படி RCB கோப்பையை வெல்லுமா, ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்கி முதல்வர் சித்தராமையா பொதுவிடுமுறையாக அறிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,