மகான் வள்ளலார் மிகப்பெரிய யோகி. ஆன்மீகத்தில் பலவழிகள் இருக்கிறது. அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பாதையை வழிகாட்டினார். அவர் இறுதிகாலத்தில் ஜோதியானார் என்று கூறப்படுகிறது. நடந்தது என்ன என்றால்? பொதுவாக ஒவ்வொரு பொருளும் இந்த உலகமும் நம் உடலும் என அனைத்தும் பஞ்சபூதத்தால் ஆனது என்பது அடிப்படை உண்மை.
பொதுவாக யோகிகள் உடலை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் வெளியேறிவிடுவர். இது அவர்கள் விழிப்புணர்வாக விரும்பிய நேரத்தில் செய்வார்கள். ஆனால் மிகச்சிறந்த ஆளுமையுடைய யோகிகள், பஞ்ச பூதத்தால் ஆன தங்கள் உடலில், பஞ்ச பூதத்தையும் தனிதனியே பிரித்துவிடுவார்கள். அதைதான் வள்ளலார் செய்தார்.
இப்படி பட்ட மகா யோகிகள் தாங்கள் மீண்டும் பிரித்த பஞ்ச பூதங்களையும் தேவைபட்டால் மீண்டும் சேர்க்க வல்லவர்களாக இருப்பார்கள். இந்த திறமையைதான் சாகாவரம் பெற முடியும் என்று கூறுகிறார்.
இதேபோல் அகத்திய மகரிஷி இன்னும் வித்தியாசமாக தன்னுடைய பஞ்சகோசங்களையும் பிரித்து மனோமய கோசத்தை சதுரகிரியிலும் இன்னொன்றை தலைகாவிரியிலும் மற்றும் வேறுசில இடங்களிலும் பிரித்து வழங்கினார். அன்னமய கோசமாகிய அவரின் உடலை முருகப்பெருமான் எடுத்து சென்று கயிலை மலையில் சேர்த்திருக்கிறார்.
அதே போல் முருகபெருமான் ஏழுசக்கரங்களின் வழியாக குமார பர்வதத்தில் உடலை விட்டிருக்கிறார்.
சற்குரு ஸ்ரீபிரம்மா வெள்ளியங்கிரியில் ஏழாவது மலையில் ஏழுசக்கரங்களின் வழியாக உடலை விட்டு நீங்கினார்.
திருஞானசம்பந்தர் அவர்மட்டுமல்லாது அவர் கல்யாணத்திற்கு வந்த அனைவருக்கும் முக்தி வழங்கினார். மாணிக்கவாசக பெருமானும் இதுபோல் கோவில் கருவறையில் இறைவனுடன் கலந்துவிட்டார்.
திருநாவுக்கரசர் கயிலாய மானசரோவரில் மூழ்கி திருவையாற்றில் தோன்றினார். சில மகான்கள், சமாதி ஆகி மீண்டும் தோன்றி மீண்டும் சமாதி ஆகி இருக்கிறார்கள்.
இதுபோல் என்னற்ற மகான்கள் யோகநிலையில் வழிகாட்டிய பதையை நாம் மதித்து புரிந்துகொண்டு வாழும் பாக்கியத்தை நமக்கு இறைவன் வழங்கியிருக்கிறார். அதனால் நம் வாழ்க்கையை மே;படுத்துவதற்கான வழிபாடுகளைச் செய்வோம்.