தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர் பின்னணி பாடகர் பாடலாசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றினார். மேலும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் மற்றும் நடிகராவார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்தது.
2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். ஆரம்பத்தில் பல கேலி கிண்டலுக்கு ஆளானார் தனுஷ். ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி தற்போது பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
கடந்த ஆண்டு ராயன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் தனுஷ். தொடர்ந்து நடிப்பு இயக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இரண்டாவது இயக்கமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் என்ன என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் பல புது முகங்கள் பணியாற்றி இருக்கிறார்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் அனைவரின் கவனமும் என் மேல்தான் இருக்கும். புது முகங்களுக்கு கவனம் கிடைக்க வேண்டும் அதனால் நான் வரவில்லை என்று கூறி இருக்கிறாராம் தனுஷ். இதை அறிந்த ரசிகர்கள் தனுஷ் இவ்வளவு நல்லவரா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.