உலகில் ஒரு நாளும் வினோதமான செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் தடை செய்ய வேண்டும் என அரசாங்கம் விரும்பும். அதுபோல அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் Crocs காலனிகளை அணியக்கூடாது என்பதை தடை விதித்து வருகிறது. இதற்கு காரணம் என்னவென்று இனி காண்போம்.
அமெரிக்காவின் முக்கிய பெரு நகரங்களான ஃப்ளோரிடா போன்ற இடங்களில் பள்ளி குழந்தைகள் Crocs அணிந்து வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் இந்த Crocs காலணிகளில் பின்னால் பிடிப்பு இல்லாததால் குழந்தைகள் தடுக்கி விழும் சம்பவம் அதிகப்படியாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த காலணிகளை தடை செய்யும் முயற்சிகளில் அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த Crocs காலணிகள் மிகவும் வண்ணமயமாக இருப்பதால் மாணவர்களுக்கு வகுப்பறையில் கவன சிதறல்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் இந்த Crocs காலணிகளை அணிய தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நடவடிக்கையை தாண்டி Crocs காலணிகளை பள்ளிகளுக்கு அணிந்து வரும் மாணவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டு வருகிறது.