செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நீங்க செய்யக்கூடாத விஷயம்… ஃபாலோ பண்ணுங்க செல்வம் சேரும்!

ஆன்மிகம் என்றாலே நமக்கு பலவித சந்தேகங்கள் தான் முதலில் வந்து நிற்கும். அந்த சந்தேகங்கள் விலக விலக நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த வகையில் இன்று நம் சிந்தையை தெளிவடைய வைக்கும் சில…

ஆன்மிகம் என்றாலே நமக்கு பலவித சந்தேகங்கள் தான் முதலில் வந்து நிற்கும். அந்த சந்தேகங்கள் விலக விலக நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த வகையில் இன்று நம் சிந்தையை தெளிவடைய வைக்கும் சில ஆன்மிக சந்தேகங்களையும் அதற்கான விளக்கங்களையும் பார்க்கலாம்.

வீட்டில் விளக்கேற்றும்போது சுவாமி படங்களுக்கு பூ போடுவது கட்டாயமா என்று சிலர் கேட்பர். காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபட வேண்டும். மாலையில் பூ கட்டாயமல்ல.

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால் தான் இவ்விரு நாள்களிலும் வீட்டில் ஒட்டடை அடிக்கக்கூடாது என்பர். முதல் நாளே ஒட்டடை அடித்து விட சுத்தப்படுத்தி விட வேண்டும்.

கடவுளை வழிபடும்போது கண்ணை மூடிக் கொண்டு வழிபடலாமா என்றும் சிலர் கேள்வி எழுப்புவர். கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில் கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபடலாம். மாலை நேரத்தில் சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க. இதுக்கும் ஆன்மிக ரீதியாகக் காரணம் இருக்கு.

சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்ற வேலைகளைக் குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள். அப்போது கடவுளைத்தான் வழிபட வேண்டும். வேற வேலைகள் செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டுக்கு வரும் வேளை விளக்கேற்றி வழிபடுவதே சிறப்பான பலன் தரும். மற்ற விஷயங்களை அப்போது செய்யக்கூடாது.