வயிற்றுவலி பிரச்சனையால் பலரும் அவதிப்படுகிறார்கள். தீவிர வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் தற்கொலை வரை போய் விடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு அருமருந்துதான் இந்த யோகாசனம். வாங்க அது என்ன? எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
வயிற்று நோய் நீக்கி வாழ்வளிக்கும் பரிவ்ருத்த திரிகோணாசனம். மனம், இடுப்புப் பகுதி மற்றும் கைகள். குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு என மூச்சில் கவனம் தேவை.
முதுகுத் தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது. வயிற்றுபுறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படுகின்றன. முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ் பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையை அதிகரிக்கிறது.
தீராத வயிற்று வலி
வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இடுப்பு பகுதியை மெலிதாக்குகிறது. சிறுநீரகங்கள் உரம் பெறுகின்றன. உடல் இலேசாக , புத்துணர்வாக, ஓய்வாக உணர்கிறது. ரத்த ஓட்டம் நன்கு பாய்வது உணரப் படுகிறது.
பெரும்பான்மையான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. இடுப்பு ,மூட்டு தோள்பட்டை, கணுக்கால்கள் ஆகியவற்றின் பிடிப்பு நீங்குகிறது. உடம்புப் பகுதியில் உள்ள தசைகளின் இறுக்கத்தன்மை நீங்கி தளர்கிறது.
தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப் படுவோர், இதய நோயாளிகள் இதைச் செய்தல் கூடாது.