நீங்கள் நாவடக்கம் உடையவரா? அப்படின்னா இதுதான் உங்க டெஸ்ட்!

ஆசைகளை முற்றிலுமாகத் துறக்க வேண்டும். அதுதான் துன்பத்திற்கு வழி வகுக்கிறது என்றதும் துறவறத்தை மேற்கொள்ளத் துணிந்து விடுகின்றனர். அதற்கு முதலில் நாவடக்கம் வேண்டும். உணவில் சிறிது ருசி குறைந்தாலும் நாம் சாப்பிட மாட்டோம். கொஞ்சம்…

ஆசைகளை முற்றிலுமாகத் துறக்க வேண்டும். அதுதான் துன்பத்திற்கு வழி வகுக்கிறது என்றதும் துறவறத்தை மேற்கொள்ளத் துணிந்து விடுகின்றனர். அதற்கு முதலில் நாவடக்கம் வேண்டும். உணவில் சிறிது ருசி குறைந்தாலும் நாம் சாப்பிட மாட்டோம். கொஞ்சம் உப்பு குறைந்து விட்டால் வீட்டில் அவ்ளோ சத்தம் போடுவோம். நாம எப்படி நாவை அடக்குவது என்கிறீர்களா? நீங்கள் நாவடக்கம் உடையவரா என்பதை அறிய ஒரு சின்ன டெஸ்ட் உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளலாம். வாங்க பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் பண்டைய காலங்களில் துறவறம் மேற் கொள்ளும் போது உணவு வகைகளில் சுவைகளை கைவிட்டு விடுவார்கள். தீவிரமான பிரம்மச்சரியம் மேற்கொள்பவர்கள் உணவில் சுவைகளை அறவே நீக்கி விடுவார்கள். ஆசைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன.

ஐம்பொறிகள் வாயிலாகவும் ஆசைகள் உருவெடுக்கின்றன.தீவிரமான பிரம்மச்சரியத்தில் எந்த ஆசைக்கும் இடமில்லை. மற்ற 4 விஷயங்களையும் மனிதன் கட்டுப்படுத்தி வைத்து விட முடியும். ஆனால், உணவு உண்ணாமல் வாழ்வது என்பது இயலாத காரியம். வேண்டுமானால் உணவைக் குறைத்துக் கொள்ளலாம்.

அப்படி உணவு என்று உண்கிற போது அதை சுவைக்காமல் இருக்க முடியாது. அப்படி சுவை தந்து உண்ணுகிற போது அந்த சுவையில் பற்று வைக்காமல் இருந்து பழக வேண்டும். முதலில் மிகவும் கடினமாகத்தான் இருக்கும். உப்பு, காரம் இல்லை என்றால் எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் உண்ண முடியாது.

ஆனால், பற்றுகளை அறுத்தவர்களுக்கு அது சாத்தியமாகிறது.அந்த அறுசுவைகள் முறையாக அமையாது போய்விடும் போதும் அந்தச் சுவையைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் உண்ண முடியும். நாவை வென்றவர்களுக்கு இது சாத்திய மாகிறது. ஒரு மனிதனுக்கு ஆசை அடங்கி இருக்கிறதா என்பதை இந்த நாவடக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும். எல்லா ஆசைகளையும் அடக்கியவனே துறவி. அவனே ப்ரம்மச்சரியம் கடைபிடிக்க முடியும்.

ஆசையை அவன் எவ்வளவு தூரம் அடக்கியிருக்கிறான் என்பதை சுவை என்ற விஷயத்தில் நாவை அவன் எந்த அளவுக்கு அடக்கியிருக்கிறான் என்பதை வைத்து தெரிந்து கொள்ள முடியும். முற்காலங்களில் சீடனின் ஆசையை அளந்தெடுப் பதற்கு குருவிற்கு நாவடக்கமே பயன்பட்டுள்ளது. ப்ரம்மச்சரிய விரதத்தில் 4 நிலைகள் உண்டு. அந்த 4 நிலைகளைப் பெற்றிருப்பவன் இயல்பாகவே நாவடக்கம் உடையவனாகவே இருப்பான்.