அறுசுவை உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே..!

சொல்லும் சொல்லில் மட்டும் நாவடக்கம் இருந்தால் போதாது. உணவை சாப்பிடுவதிலும் இருக்க வேண்டும். சாப்பிடும் உணவிலும் அது இருக்க வேண்டும். அறுசுவைகளை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் மற்றும் கெடுதல்கள் உண்டாகிறது. நாவை அடக்கினால் என்னென்ன…

சொல்லும் சொல்லில் மட்டும் நாவடக்கம் இருந்தால் போதாது. உணவை சாப்பிடுவதிலும் இருக்க வேண்டும். சாப்பிடும் உணவிலும் அது இருக்க வேண்டும். அறுசுவைகளை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் மற்றும் கெடுதல்கள் உண்டாகிறது. நாவை அடக்கினால் என்னென்ன நன்மைகள்னு பார்க்கலாமா…

அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல, நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட காரணமாக இருக்கின்றன. எனவேதான் ஆன்மிக சாதகர்களுக்கு நாவடக்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

இனிப்பு :

மண் நீர் இணைந்தது. நெருப்புத் தன்மை பொருந்தியது. இளக்கமானது. செரிமானக் காலம் மிகுவது. எலும்பு, சதை, குருதி, கொழுப்பு,சாறு, சுக்கிலம் ஆகிய உடல் தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது.

புளிப்பு :

மண் தீ இணைந்தது. பசியைத் தூண்டும். ஜீரணத்தை மிகைப் படுத்தும். உணவின்பால் வேட்கையும் சுவை உணர்வையும் ஏற்படுத்தும். வெப்பத்தை கூட்டும்.

உவர்ப்பு :

நீர் தீ இணைந்தது. உப்பு சுவை என்றழைப்பர். உப்பு உடல் உறுப்புகளுக்குள் கசிவையும் இசைவையும் ஏற்படுத்தும். வியர்வையை மிகுதிப்படுத்தி வெளியேற்றும்.

கசப்பு:

நீர் வளி . இந்த சுவையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதுதான் உடலுக்கு உறுதுணையாகிறது. பூச்சிகளைக் கொல்கிறது. விஷத்தை முறிக்கிறது. குறைந்தால் குருதி தூய்மை கெடுகின்றது.

காரம் :

தீ வளி இணைந்தது. உணவின்பால் நாட்டத்தை உண்டாக்கும். செரிமான ஆற்றலை மிகுவிக்கும்.விந்து நீற்றுப் போகும். உடல் ஆற்றல் குறையும். உடலில் நடுக்கம் ஏற்படும். வலிப்பு நோய் ஏற்படக் கூடும்.

துவர்ப்பு :

மண், வளி இணைந்தது. செரிமானத்தைக் குறைக்கும். மிகுந்தால் வயிறு பொருமும். மலம் சிக்கும். சிறுநீர் தடைபடும். ஆண்மை, பெண்மை குறையும். உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும். குறைந்தால் குருதி கெடும். கசியும்.
அறுசுவைகள் இந்த அளவிற்கு நம் உடலில் முக்கியமான கிரியா ஊக்கிகளாக விளங்குகின்றன.

பொதுவாக நாவடக்கம் என்றால் பேசுவதைக் குறித்து பொருள் கொள்வோம். ஆனால், நாவடக்கம் என்பதை உணவில் சுவை ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதையோ அல்லது சுவைகளைக் கைவிடுவதையோ கூட பொருளாகக் கொள்ளலாம். உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் போது நம் உணர்வுகள் தறிகெட்டு ஓடுகின்றன.விளைவு தவறான எண்ணங்கள் தவறான செயல்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.