சீனா தயாரித்த ஆயுதங்கள், சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தான் பயன்படுத்தியதில் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஓர் வெடிக்காத ஏர்-டூ-ஏர் ஏவுகணையை இந்தியா மீட்டதையும் பற்றி, சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர் பதிலளித்துள்ளார்.
சமீபத்திய மோதலில் சீனாவின் ஆயுதங்கள் எவ்வாறு செயல்பட்டன என்ற கேள்விக்கும், இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: “பாகிஸ்தான், சீனாவின் விமான எதிர்ப்பு மற்றும் செயற்கைகோள் அமைப்புகளின் ஆதரவை பெற்றது. ஆனால் அவை சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டன,” என்ற விமர்சனத்துக்கும் பதிலளிக்கும்போது, செய்தியாளர் சந்திப்பில் சியாங் சியாவோகாங் நேரடியாக ஆயுதங்களின் செயல்திறனை பற்றி பதிலளிக்கவில்லை. செயல் திறன் தோல்வி குறித்த கேள்விக்கு அவர் ஒரு கட்டத்தில் பதில் சொல்ல திணறியதாக கூறப்படுகிறது.
ஆனால் ஊடகங்களின் பார்வையை திசை திருப்புவதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக அமைதியாகவு நடந்துகொள்ள வேண்டும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பு என அவர் வலியுறுத்தினார். மேலும், அவர் கூறியதாவது: “இந்த பிராந்தியத்தில் அமைதியை சீனா ஆதரிக்கிறது. என தெரிவித்தார்.
இந்தியா, PL-15E என்ற பார்வைக்கு அப்பாலான (Beyond Visual Range) ஏர்-டூ-ஏர் ஏவுகணையை மீட்டதா? இது தொடர்புடைய இராணுவ தொழில்நுட்பங்களை இந்தியா ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்யும் வாய்ப்பு உள்ளதா? என்ற ஊடகவியலாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, “இந்த ஏவுகணை ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு உபகரணம். இது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெற்ற பல பாதுகாப்பு கண்காட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளது” என சியாங் விளக்கியார்.
பாகிஸ்தான் மே 8, 9, 10 ஆகிய தினங்களில் மேற்கொண்ட பதிலடி முயற்சிகளின் போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுத அமைப்புகளின் பாகங்கள் மீட்கப்பட்டன. இது அவற்றின் செயல்திறனை பற்றி கேள்விகளை எழுப்பியது.
ஸ்டோக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட தகவலின்படி, 2020 முதல் 2024 வரை பாகிஸ்தானின் மொத்த ஆயுத இறக்குமதியின் 81%ஐ சீனா வழங்கியுள்ளது. இதில் உயர் தர போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் அடங்கும். சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து தயாரிக்கும் JF-17 போர் விமானம், பாகிஸ்தான் விமானப்படையின் முதன்மை ஆதாரமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.