எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி

  ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…

modi1

 

ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக நேற்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்திய ஆயுதப்படைகள், உளவுத்துறை முகமைகள் மற்றும் விஞ்ஞானிகளின் துணிச்சலும், திறமையும் கொண்டாட்டத்திற்குரியது என மோடி பாராட்டினார்.
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், இந்திய ராணுவம் சாதனை படைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் தங்கள் மத அடையாளத்துக்காகவே ஜம்மு & காஷ்மீரில் சுற்றுலா சென்ற பொதுமக்கள் குறிவைத்து கொல்லப்பட்டதை மோடி கடுமையாக கண்டித்தார்.

சிப்பாய்களின் தைரியத்தையும் வீரத்தையும் இந்திய பெண்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் உரையில் தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக நாடு முழுமையான ஒற்றுமையுடன் நின்று கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்திய ஆயுதப்படைகளுக்கு தேவையான தீர்மானங்களை எடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் உறுதியாகக் கூறினார்.

இதன்பின் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ பொது இயக்குநர்கள் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், இருநாடுகளும் தங்களது தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவது என உறுதி தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இன்று விமானப்படை வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியபோது, ‘ஆபரேஷன் சிந்தூர் என்பது இனிமேல் இயல்பு நிலையாக மாறும். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மறைவதற்கான இடமே இனி இல்லை, நாங்கள் வீட்டுக்குள்ளே புகுந்து தாக்குவோம். பாகிஸ்தான் இனிமேல் எப்போதும் தூங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்பதை உறுதிசெய்வோம். விமான படை, கடற்படை, தரைப்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை என ஒவ்வொரு வீரனுக்கும் என் வணக்கம்.

எங்கள் ஏவுகணைகள் இலக்குகளை தாக்கும் போது, எதிரிகளின் காதில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற ஓசை கேட்கும்’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.