பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில், பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றியது. இது, பாகிஸ்தானுக்கும், அதன் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கையாக இருந்தது.
இந்த தாக்குதலில் பிரம்மோஸ் ஏவுகணையின் வெற்றிகரமான பயன்பாடு, இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனையும், பல்தரப்புகளில் தாக்கம் செலுத்தும் சாமர்த்தியத்தையும் உலகுக்கு எடுத்து காட்டியது.
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பாகும்.
இது நிலத்தில், வானில், மற்றும் கடலில் இருந்து ஏவக்கூடியது. அதிவேகமானது (Supersonic) – Mach 3 (அதாவது ஒலியின் வேளையை விட 3 மடங்கு வேகம்)
துல்லியமான தாக்குதல், குறைவான பிழை விகிதத்தில் இலக்குகளை அச்சுறுத்தும் திறன்
பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த ஏவுகணையின் முதன்மை சோதனை 2001 ஜூன் 12 அன்று நடைபெற்றது. அதன்பின் பல்வேறு தரம் உயர்த்தப்பட்ட பதிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதைய மேம்பட்ட பதிப்புகளில் இது:
290 முதல் 800 கிலோமீட்டர் வரை தூரம் தாக்கக்கூடியது
200 முதல் 300 கிலோ கிராம் வரை வெடிபொருட்கள் ஏற்றக்கூடியது
குறைந்தபட்சம் 10 மீட்டர் உயரத்தில் பறந்து, இலக்கை தாக்கக்கூடியது
15 கிமீ உயரம் வரை பறக்க முடியும்
பிரம்மோஸ் ஏவுகணையின் வேகம், துல்லியம் மற்றும் தற்காலிக போரியல் நுட்பங்கள் காரணமாக, பல நாடுகள் இதை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
பிலிப்பைன்ஸ்: 2022 ஜனவரியில் $375 மில்லியன் ஒப்பந்தத்தில் மூன்று கடலோர பாதுகாப்பு அமைப்புகள் வாங்க ஒப்பந்தம் செய்தது. முதல் அமைப்பு ஏப்ரல் 2024 இல் வழங்கப்பட்டது; இரண்டாவது 2025 ஏப்ரலில் எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் உள்ள நாடுகள்
இந்தோனேஷியா: $200–$350 மில்லியன் மதிப்பிலான மேம்பட்ட பதிப்பை வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
வியட்நாம்: தங்கல் நாட்டின் இராணுவம் மற்றும் கடற்படைக்கு ஏவுகணைகள் வழங்கும் $700 மில்லியன் ஒப்பந்தத்தை திட்டமிட்டு உள்ளது.
மலேசியா: Sukhoi Su-30MKM போர் விமானங்கள் மற்றும் Kedah வகை யுத்தக் கப்பல்களுக்காக பிரம்மோஸ் ஏவுகணையை பரிசீலித்து வருகிறது.
தாய்லாந்து, சிங்கப்பூர், புரூனே: இந்த நாடுகள் பிரம்மோஸ் மீது ஆர்வம் தெரிவித்துள்ளன, பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது.
பிரேசில், சிலி, அர்ஜெண்டினா, வெனிசூய்லா: கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்படை பயன்பாட்டுக்காக பிரம்மோஸ் ஏவுகணைகளை விரும்புகின்றன.
எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமான்: மேற்கு ஆசிய நாடுகள் சில பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கும் நிலையில் உள்ளன.
தென் ஆப்பிரிக்கா, பல்கேரியா: வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
பிரம்மோஸ் ஏவுகணை தற்போது இந்தியாவின் மிக வேகமான ஏவுகணை. இது இன்று இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் நம்பிக்கையான ஆயுதமாக மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியில் பரிசீலிக்கப்படும் ஒரு உன்னத ஆயுதமாகவும் திகழ்கிறது. இதனால் சீனாவின் ஆயுத வியாபாரம் கிட்டத்தட்ட படுத்தேவிட்டது.