மேலும் துருக்கி பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள் வழங்கியது மட்டுமின்றி ராணுவ நிபுணர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் ஆபரேஷன் ஒருங்கிணைப்பு மற்றும் ட்ரோன் போர் உத்திகள் போன்ற முக்கிய துறைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
துருக்கி வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவை நோக்கி ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், இந்தியாவின் பதிலடி நடவடிக்கையில், 2 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த மோதலில் பாகிஸ்தான் 350க்கும் அதிகமான துருக்கி ட்ரோன்களை பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியின் ஈடுபாடு இப்போது மறுக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டதால், இந்தியா இனி துருக்கியிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மேலும் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமான நிலையங்களை இந்தியா தாக்கியபோது, துருக்கியை சேர்ந்த இரண்டு ஆயுத ஒப்பந்ததாரர்கள் உயிரிழந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்ததும், போருக்கு உதவியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.