புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?

  தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய…

pulwama

 

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், அவந்திபோராவின் சிறப்புப் படைப் பிரிவும்  இந்திய ராணுவமும் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கையைத் தொடங்கின.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் ஒரு குடியிருப்பு வீட்டிற்குள் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது அங்கு தீவிர துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

பயங்கரவாதிகள் தப்பிச் செல்லாமல் இருக்க, கூட்டாக செயல்படும் பாதுகாப்பு படையினர் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளையும் சீல் வைத்துள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 48 மணி நேரத்தில் நடைபெறும் இரண்டாவது தாக்குதல் நடவடிக்கையாகும். இதற்கு முன்பு, மே 13 அன்று சோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரின் போது, பாதுகாப்புப் படையினர் மூன்று லஷ்கர்-இ-தொய்பா  பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றிருந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தெற்கு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை வேரறுக்க பாதுகாப்பு அமைப்புகள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திரால் பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன, மேலும் திராலில் நடைபெறும் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் தப்பிச் செல்வதற்கான வழிகளை தடுக்க அதிகாரிகள் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். தற்போது சுற்றி வளைக்கப்பட்ட தீவிரவாதிகள் பகல்காம் தாக்குதலில் தொடர்பு உடையவர்களாக இருக்கலாம் என்றும் மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டு வருகிறது..

South Kashmir: Second Encounter in 48 Hours Breaks Out in Tral

ஜம்மு காஷ்மீர், புல்வாமா, திரால், என்கவுண்டர், பயங்கரவாதிகள்,  Jammu and Kashmir, Pulwama, Tral, Encounter, Terrorists, Security Forces, South Kashmir, Counter-insurgency,