ஜம்மு காஷ்மீரில் ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி திடீர் சோதனை.. பயங்கரவாதிகள் ஊடுருவலா?

மத்திய மற்றும் வடக்கு காஷ்மீரில் பல இடங்களில் தற்போது தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவை பயங்கரவாத சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (SIA)…

raid

மத்திய மற்றும் வடக்கு காஷ்மீரில் பல இடங்களில் தற்போது தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவை பயங்கரவாத சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன.

ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (SIA) இந்த சோதனைகளை ஸ்ரீநகர், கந்தர்பல், பாரமுலா மற்றும் குப்வாரா மாவட்டங்களில் நடத்தி வருகிறது. ஸ்ரீநகரில், நவ்காம் உள்ளிட்ட பகுதிகள் சோதனைக்கு உட்பட்டுள்ளன. பாரமுலா மாவட்டத்தில், குஞ்சர் பகுதியில் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தீவிரவாத தொடர்புடைய சில பழைய வழக்குகளுடன் இந்த விசாரணைகள் தொடர்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றவாளிகள் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற குறியாக்கம் செய்யப்பட்ட மெசேஜிங் செயலிகள் மூலம் முக்கிய பாதுகாப்பு தகவல்களை பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகம் எழுகிறது.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை (NIA) 2023 ஆம் ஆண்டில் புனேவில் தற்கொலை வெடிகுண்டுகள் (IEDs) தயாரிப்பு மற்றும் சோதனை தொடர்பாக உள்ள வழக்கில், தடைசெய்யப்பட்ட ISIS அமைப்பின் ஸ்லீப்பர் மோட்யூலுடன் தொடர்புடைய இருவரை இன்று மும்பை விமான நிலையத்தில் கைது செய்துள்ளது.

அப்துல்லா ஃபயாஸ் ஷெய்க்   மற்றும் தல்ஹா கான் – ஜகார்த்தா ஆகிய இருவரும் இந்தோனேசியாவில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது  கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இரண்டு ஆண்டுகளாக தப்பிச் சென்றிருந்த நிலையில், மும்பை விமான நிலையம் டெர்மினல் 2 இல் குடிவரவு அதிகாரிகளால் சிக்கினர். பின்னர் NIA அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களுக்கு எதிராக பிணையமற்ற பிடியாணைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.