ரூ.1 லட்சம் செலவில் ‘Made in India’ ட்ரோன்.. ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் அசத்தல் தகவல்..!

  இந்தியா முழுவதும் ரூ.1 லட்சம் விலையில் இலக்கை கவனித்து தாக்கக்கூடிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் கிடைக்கின்றன என்று ஓய்வு பெற்ற  மேஜர் ஜெனரல் ரமேஷ் சந்திரபதி  தெரிவித்துள்ளார். அவர் தற்போது IG Drones…

drones

 

இந்தியா முழுவதும் ரூ.1 லட்சம் விலையில் இலக்கை கவனித்து தாக்கக்கூடிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் கிடைக்கின்றன என்று ஓய்வு பெற்ற  மேஜர் ஜெனரல் ரமேஷ் சந்திரபதி  தெரிவித்துள்ளார். அவர் தற்போது IG Drones நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக உள்ளார். இந்தக் கருத்தை அவர்   “Defending Bharat” நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் இதுகுறித்து கூறிய போது, ‘நம்மிடம் மிகச்சிறிய ட்ரோன்கள் உள்ளன, FPV காமிகாசி ட்ரோன்கள். இவை இலக்கை நேரடியாக காணும் வகையில் அமைந்துள்ளன. வேகம் மணி நேரத்திற்கு 140 கிமீ வரை செல்லும். பின்னர் நேராக கீழே விழுந்து இலக்கை தாக்கும்.”

இவர் வெளியிட்ட இந்த கருத்து முக்கியத்துவம் பெறுவது ஏனெனில், பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்கள் எப்போதும் விலை உயர்ந்தவை என்பது அல்ல, குறைந்த விலையிலும் கிடைக்கும் என்பது தான். மேலும்,  ‘Made in India’ திட்டத்தின் கீழ் குறைந்த செலவில் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும் என்பதையும் அவரது பேச்சு நிரூபிக்கிறது.

மேஜர் ஜெனரல் சந்திரபதி கூறிய IG Drones சமீபத்தில் “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பான அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு முக்கிய ட்ரோன் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து பெரிதும் கவனம் பெற்றது. இந்த நடவடிக்கையின் கீழ், இந்தியா பாகிஸ்தான் எல்லை மற்றும் அதற்கு உள்ளே உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

மேலும், மேஜர் ஜெனரல் சந்திரபதி கூறியதாவது: “மே 7ஆம் தேதி, நாங்கள் இந்திய ராணுவத்துக்காக ட்ரோன்களை வழங்கும்போது, எங்கள் ஊழியர்கள் சிக்கி கொண்டனர். அந்த இரவு துவக்கமாக மோதல் நடந்தது. எங்களுடைய நான்கு ஊழியர்கள் பூஞ்ச் பகுதியில் சிக்கினர். அவர்களது பாதுகாப்பு குறித்து நான் மிகவும் கவலை அடைந்தேன். ஆனால் தகுந்த நபர்களை தொடர்பு கொண்டு, எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாமல் அவர்களை மீட்டு கொண்டு வர முடிந்தது.”