நன்றியா சொல்ற.. ஆப்பு இன்னும் பத்தல போல.. மோடியின் விஸ்வரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க..!

  பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகானை நேற்று நேரில் சந்தித்து, இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட ராணுவ மோதலில் பாகிஸ்தானுக்கு வழங்கிய உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். 2023-ம்…

pakistan turkey

 

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகானை நேற்று நேரில் சந்தித்து, இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட ராணுவ மோதலில் பாகிஸ்தானுக்கு வழங்கிய உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

2023-ம் ஆண்டு நிலநடுக்கம் நேரத்தில் இந்தியா துருக்கிக்கு உதவிய “ஆபரேஷன் தோஸ்த்” ஆகிய நினைவுகளை ஒதுக்கி வைத்த துருக்கி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் அதனைத் தொடர்ந்து இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகானை நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் “இஸ்தான்புல் நகரில் என் அன்பு சகோதரர் அதிபர் எர்டோகானை சந்தித்த பெருமை எனக்கு கிடைத்தது. சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு அவர் வழங்கிய உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன்,” என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே பன்முக ஒத்துழைப்பு, குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளில் நடைபெற்று வரும் முன்னேற்றங்களை மீளாய்வு செய்ததாகவும், அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக இணைந்து செயல்பட உறுதி எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான்-துருக்கி நட்பு நீடிக்கட்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த இரு தலைவர்களும் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட கொடூர தாக்குதலன்று சந்தித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

ஷரீஃப் தற்போது ஆறு நாட்கள், நான்கு நாடுகளை சுற்றும் பயணத்தில் உள்ளார். மே 7 முதல் 10 வரை நடந்த “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் இந்தியா, பாகிஸ்தானின் பயங்கரவாத மற்றும் ராணுவ கட்டமைப்புகளை கடுமையாக தாக்கியதற்கு பிறகு இந்த சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. துருக்கிக்கு பிறகு அவர் அஸர்பைஜான், ஈரான் மற்றும் தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் நன்றிக்கு பதிலளித்த துருக்கி அதிபர் எர்டோகான், பாகிஸ்தானிய மக்களுக்கு தனது மனம் கனிந்த அன்பை தெரிவித்தார். “இந்த சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அசைக்க முடியாத உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். நாங்கள் பொருளாதாரம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதித்தோம். வரலாற்று, மனித நேயம், அரசியல் ஆகிய அனைத்து துறைகளிலும் உறவுகளை வலுப்படுத்த உறுதி எடுத்தோம். என் சகோதரர் ஷரீஃப் கூறியதுபோல, இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, உறவு, சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலாக இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை துருக்கி கண்டித்தது. மேலும், இந்தியா பயங்கரவாத முகாம்களை தாக்கவில்லை, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்துக்கும் துருக்கி ஆதரவு தெரிவித்தது. துருக்கி வழங்கிய ட்ரோன்கள் பாகிஸ்தானால் இந்திய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்த தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டன.

2023ல் நிலநடுக்க நேரத்தில் இந்தியா உதவி செய்ததற்குப் பிறகும், இவ்வாறு பாகிஸ்தானுக்கு முக்கிய தருணத்தில் ஆதரவு அளித்ததற்காக துருக்கிக்கு இந்தியாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்து, துருக்கி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கைகள் எழுப்பினர்.

ஏற்கனவே துருக்கியவுடன் வர்த்தகத்தை இந்தியா முழுமையாக நிறுத்திய நிலையில் துருக்கி நாட்டிற்கு ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து அவருடைய நன்றியை ஏற்றுக்கொண்டதோடு இரு நாடுகளும் நட்பு நாடுகள் என்று மீண்டும் துருக்கி அதிபர் உறுதி செய்துள்ள நிலையில் இதுவரை துருக்கி ஏற்பட்ட கொடுத்த ஆப்பு போதவில்லை, மோடி இன்னும் தனது விஸ்வரூபத்தை காட்டி பாகிஸ்தானுக்கு ஏன் ஆதரவு கொடுத்தோம் என துருக்கி அதிபரை நினைக்க வைப்பார் என நெட்டிசன்கள் இந்த சந்திப்பு குறித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்