இந்தியாவுக்கு எதிரான போரை இனி நினைச்சு கூட பார்க்க கூடாது.. புதிய செயற்கைகோள் படங்களில் பாகிஸ்தானின் சேதம்..!

  இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் நூர் கான் விமான நிலையம் எவ்வளவு சேதமடைந்தது என்பது குறித்த புதிய செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த புதிய செயற்கைக்கோள் ஆய்வு,…

pakistan

 

இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் நூர் கான் விமான நிலையம் எவ்வளவு சேதமடைந்தது என்பது குறித்த புதிய செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த புதிய செயற்கைக்கோள் ஆய்வு, முந்தைய தகவல்களை விட அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக காட்டுகிறது. இந்திய விமானப்படையின் துல்லியமான தாக்குதல்களில் நூர் கான் விமான நிலையத்தின் ஒரு பெரிய வளாகமே முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

The Intel Lab பகிர்ந்த செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், பாதுகாப்பு ஆய்வாளர் டேமியன் சைமன், “பாகிஸ்தானில் உள்ள நூர் கான் விமானத் தளத்தின் புதிய ஆய்வில், இந்திய தாக்குதல் நடந்த பகுதியில் இருந்த முழு வளாகமும் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

மே 8 முதல் 10 வரையிலான காலத்தில், ராவல்பிண்டியில் அமைந்துள்ள இந்த விமான தளத்தின் அடித்தள மற்றும் தரைத்தளங்களை இலக்காக வைத்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது என ஏற்கனவே வெளியான செயற்கைக்கோள் தகவல்கள் கூறியிருந்தன. இந்த தாக்குதல் முக்கியத்துவம் உள்ளது மட்டுமல்ல, பாகிஸ்தானின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. காரணம், இந்த தளம் பாகிஸ்தான் இராணுவ தலைமையகத்திற்கு மிக அருகில் உள்ளது என்பதும், வான்தடம் செயல்பாடுகளுக்கான கட்டுப்பாட்டு மையமாகவும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விமானத் தளம், பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் VIP விமான படையின் முக்கிய மையமாகும். இங்கு Saab Erieye விமான எச்சரிக்கை அமைப்புகள், C-130 போக்குவரத்து விமானங்கள், மற்றும் IL-78 refuelling விமானங்கள் உள்ளன. மேலும், Bayraktar TB2 (துருக்கி) மற்றும் உள்ளூர் Shahpar-I ட்ரோன்கள் surveillance மற்றும் தாக்குதலுக்காக இங்கிருந்துள்ளன. இத்தகைய தாக்குதல், பாகிஸ்தானின் வான்வழி பாதுகாப்பு முறையில் பெரும் குறைபாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

மே 11ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், இராணுவத் தலைவர் ஜெனரல் சயீத் ஆசிம் முனீர் அவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்றும், அதில் இந்தியா பல விமானத் தளங்களை இலக்காக கொண்டு ஏவுகணைகளை ஏவியது என்று கூறியிருந்தார். இந்த தாக்குதலில் ஒன்று தான் நூர் கான் விமான நிலைய தாக்குதல் என அவர் கூறினார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியாவின் பத்தான்கோட் மற்றும் உதம்பூர் பகுதிகளில் பதில்தாக்குதல் நடத்தியதாக ஷரீஃப் தெரிவித்தார். ஆனால் அந்த தாக்குதலால் இந்தியாவுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.