ஒரு பிரிட்டன் யூடியூபர் தனது தொலைந்து போன AirPods-ஐ மீட்டெடுக்க பாகிஸ்தானுக்கு செல்ல தயாராகி உள்ளார். துபாயில் ஒரு ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது அவரது அறையிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு அந்த AirPods கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரிட்டனை சேர்ந்த பிரபல யூடியூபர் லார்ட் மைல்ஸ் என்பவர் 172,000-க்கும் மேலான சப்ஸ்கிரைபர்கள் கொண்ட தனது X பக்கத்தில் ஒரு பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது: “என் AirPod Pros ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போனது. அது தற்போது பாகிஸ்தானில் இருப்பதை கண்டுபிடித்திருகிறேன், அடுத்த வாரம் அங்கு சென்று அதை மீட்டெடுக்க போகிறேன் என்று அவர் பதிவிட்டார், AirPods இன் தற்போதைய இடம் பாகிஸ்தானில் இருப்பதாக காட்டும் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார்,.
AirPods துபாயில் அவரது ஹோட்டலிலிருந்து திருடப்பட்டு, பாகிஸ்தானில் தற்போது உள்ளது என்பதை அவர் ஆப்பிள் லாஸ்ட் மோட் மூலம் கண்காணித்து கண்டுபிடித்தார். அவை துபாயில் இருந்து திருடப்பட்டு பாகிஸ்தானுக்கு சென்றதாகவும், நான் லாஸ்ட் மோட் இயக்கு என AirPods பயன்படுத்திய போது தனக்கு உண்மை தெரிய வந்ததாகவும் கூறினார். மேலும் நான் பாகிஸ்தான் போலீசாரை அழைத்து அந்த பகுதியில் சென்று AirPods-ஐ மீட்டு அதை வீடியோ எடுக்கப் போகிறேன். திருடர்களையும் கண்டுபிடிப்பேன்’ என்றார்.
இந்த பதிவுகள் வைரலாகிய நிலையில் பலர் இதற்கு காமெடியான பதிலளித்தனர். பாகிஸ்தான் சென்று அதை மீட்பதை விட புதிது வாங்கிவிடலாம் என பெரும்பாலானோர் கூறினர்.
“விமான டிக்கெட்டுக்கு அதிகமாக பணம் செலவழிக்க வேண்டியது இருக்கும். அதில் 2% விலையில் AirPods-ஐ வாங்கலாம்,” என்று ஒருவர் பதிவு செய்தார்.
“பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகும் வரை காத்திருங்கள். அப்போது அதை அது எளிதாக மீட்டெடுக்க முடியும் என்று ஒருவரும், பாகிஸ்தான் செல்லும் முன்னர் சரியான காப்பீடு எடுக்கவும் என்று இன்னொருவரும், பாகிஸ்தானுக்கு சென்றால் தண்ணீர் கொண்டு செல்லவும். அங்கே இன்னும் தண்ணீர் இல்லை,” என்று இன்னொருவரும் கிண்டலாக கூறினர்.