நோய்களில் இருந்து விடுபட… வெங்காயம் செய்யும் மேஜிக்..!

பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம். இதை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம். விவசாயி…

பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம். இதை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம். விவசாயி ஒருவருக்கு நோய் இருந்ததாம். அவர் வெங்காயத்தை அரிந்து தனது படுக்கை அறையில் தலைக்கு அருகில் வைத்து விட்டு உறங்கி விடுவாராம். அதன்பிறகு மறுநாள் எழுந்து பார்த்தால் அது கருப்பு நிறமாக மாறி இருக்குமாம்.

அதற்கு என்ன காரணம்னா வெங்காயம் அந்த அறையில் இருக்கும் அனைத்துத் தீய பாக்டீரியாக்களையும் தன்னுள் ஈர்த்து கருப்பு நிறமாக மாறி விடுமாம். இதனைக் காலையில் எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டு விட வேண்டும். இப்படி செய்ததால் விவசாயி ஒருவர் நோயில் இருந்து விடுபட்டுள்ளார். இது உண்மையில் நடந்த ஒரு விஷயம். 1919ல் பரவிய விஷக்காய்ச்சலில் இருந்து இந்த விவசாயியின் குடும்பமே வெங்காயத்தால் மீண்டுள்ளது.

தினமும் இரவு தூங்கும் முன்னர், பெரிய வெங்காயத்தை இரண்டாக அரிந்து, உங்களது தலை மேட்டில் வைத்து உறங்குவதால், அது அந்த அறையில் இருக்கும் அனைத்து தீய பாக்டீரியாக்களையும் ஈர்த்து தன்னுள் அடங்கிக் கொள்ளும். நீங்கள் இதனை காலையில் எடுத்து வெளியில் குப்பைத்தொட்டியில் போட்டு விட வேண்டும்.

நாம் பெரும்பாலும், பாதி வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்தி விட்டு மீதி வெங்காயத்தை மறுமுறை உணவு சமைக்கும் போது பயன்படுத்துவது உண்டு. ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நீங்க அரிந்து வைத்த வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விட வேண்டியது அவசியம்.

அவ்வாறு இல்லை என்றால், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் புகுந்து விடும். இதனை நீங்கள் உபயோகப்படுத்தினால், உணவுப் பொருள் ஒவ்வாமை ஏற்படும். இது உடலுக்கு மிகவும் தீங்கானது. மீஞ்சிய வெங்காயத்தினை பாலித்தின் பைகள் அல்லது பிளாஸ்டிக் சாமான்களினுள் அடைத்து, அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் கூட இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.