பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் தற்போது வறண்ட பூமியாக மாறி வருகிறது என்றும், அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லை என்று அந்நாட்டு மக்கள் புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, “இந்தியாவிடம் சிந்து நதியினரை திறந்து விட வேண்டும்” என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் முழுமையாக தீவிரவாதத்திற்கு தரும் ஆதரவை நிறுத்தினால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்று இந்தியா உறுதிப்படக் கூறியுள்ளது.
இந்த நிலையில், பிரம்மபுத்திரன் நதியில் இருந்து இந்தியாவுக்கு வரும் நீரை சீனாவிடம் சொல்லி நிறுத்த சொல்வோம் என பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டிய நிலையில், அதற்கு இந்திய தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
“பிரம்மபுத்திரா என்பது இந்தியாவில் விரிவடையும் நதி; அது சீனாவால் கட்டுப்படுத்தப்பட்ட நதி அல்ல,” என்று கூறிய இந்தியா, “சீனாவில் இருந்து பிரம்மபுத்திராவுக்கு வரும் தண்ணீரின் அளவு வெறும் 30% தான். மீதமுள்ள 70% இந்தியாவில் பெய்யும் பருவமழை காரணமாக வருகிறது,” என்றும், “பல துணை நதிகளின் நீரோட்டத்தாலும் அது உருவாகிறது,” என்றும் கூறியுள்ளது.
இந்தியா–சீனா எல்லையில் உள்ள பகுதியில் இருந்து பிரம்மபுத்திரா நதிக்கு ஒரு வினாடிக்கு 2000 முதல் 3000 கன லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் வருகிறது என்றும், . ஆனால், அசாம் மாநிலத்தில் பருவமழை காலத்தில் 15,000 முதல் 20,000 கன லிட்டர் வரை பிரம்மபுத்திரா நதிக்கு தண்ணீர் வருகிறது.
எனவே, இந்த பூச்சாண்டி எல்லாம் இந்தியாவிடம் பலிக்காது என்றும், ஒருவேளை சீனா பிரம்மபுத்திராவுக்கு வரும் நீரை நிறுத்தினாலும் கூட, இந்தியாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா நதி என்பது பருவமழையை சார்ந்த இந்திய மண்டலமாகும் என்றும், இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு தான் பிரம்மபுத்திராவில் தண்ணீரின் ஓட்டம் அதிகமாகிறது என்றும், சீனாவின் நீரோட்டம் குறைந்தாலும் அது இந்தியாவில் பெய்யும் பருவமழை காரணமாக வெள்ளம் தான் ஏற்படும்; தவிர, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்றும், இந்தியாவுக்கு மிகப்பெரிய பலனளிக்கும் நதி தான் பிரம்மபுத்திரா என்றும் இந்தியா கூறியுள்ளது.
சீனா இதுவரை பிரம்மபுத்திரா நதியை ஆயுதம் ஆக்குவதாக அச்சுறுத்தல் இல்லை என்பதும், ஒருவேளை அச்சுறுத்தினாலும் கூட இந்தியா பயப்படாது என்று சீனாவுக்கு நன்றாக தெரியும் என்றும், இது பாகிஸ்தானின் பூச்சாண்டி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில், பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே சிந்து நதிகளிருந்து தண்ணீர் கிடைக்கும் என்று, சீனாவிடம் சொல்லி நீரை நிறுத்துவோம் என்று பூச்சாண்டி காட்டுவதெல்லாம் இந்தியாவுடன் பலிக்காது என்றும், பாகிஸ்தானுக்கு புரியும் வகையில் இந்தியா எடுத்துக் கூறியுள்ளது.
இனிமேலாவது பாகிஸ்தான் திருந்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.