விழுந்த அடி அப்படி.. 1000 கிமீ உள்ளே வந்து இந்தியா தாக்கியது.. பாகிஸ்தான் கூறிய புதிய தகவல்..

  ஆபரேஷன் “சிந்தூர்” என்ற நடவடிக்கையில் இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புதிதாக இரு இடங்களிலும் இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளதோடு, இது பெரும்…

war practice

 

ஆபரேஷன் “சிந்தூர்” என்ற நடவடிக்கையில் இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புதிதாக இரு இடங்களிலும் இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளதோடு, இது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் “சிந்தூர்” தாக்குதலின் போது, இந்தியா பாகிஸ்தானில் உள்ள ஒன்பது ராணுவ தளவாடங்களை தாக்கியதாக தெரிவித்திருந்தது. அவை புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தாக்கியதாக கூறப்படும் முக்கிய நகரங்கள் குறித்த ஆதாரங்களும் அதில் உள்ளன.

ஆனால் தற்போது பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மேலும் சில இடங்களில் தாக்கியதாகவும், குறிப்பாக பெஷாவர் மற்றும் அட்டோக், ஆகிய பகுதிகளை தாக்கியதாகவும் கூறியுள்ளது. இது, இந்திய எல்லையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் உள்ளே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தியா பாகிஸ்தானின் உள்ளே ஆயிரம் கிலோமீட்டர் சென்று தாக்குதல் நடத்தி, வெற்றிகரமாக திரும்பியுள்ளது என்பது இதன்மூலம் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், இந்தியா கூட குறிப்பிடாத இந்த இரண்டு இடங்களை பாகிஸ்தான் ஏன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

பாகிஸ்தானை பொறுத்தவரை, இந்தியா ராணுவ தளவாடங்களை மட்டுமன்றி குடியிருப்பு பகுதிகளிலும் தாக்கியது என்பதை உலக நாடுகளுக்கு தெரிவிக்க முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தான், பெஷாவர் மற்றும் அட்டோக் பகுதிகளையும் இந்தியா தாக்கியதாகவும், அங்கு குடியிருப்பாளர்கள் அதிகம் இருப்பதாகவும் காட்ட முனைகிறது.

ஆனால், தாக்குதல் நடத்திய இடம் குடியிருப்பு பகுதி என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் பாகிஸ்தான் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், பாகிஸ்தானே பெஷாவர் மற்றும் அட்டோக் இடங்களில் இந்தியா தாக்கியதை ஒப்புக்கொண்டிருப்பதால், இந்தியாவின் தாக்குதல் மிகவும் பலமானது என்றும், அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தியா நான்கு விமானப்படை தளங்களை மட்டுமே தாக்கியதாக தெரிவித்தது. ஆனால், இந்தியா வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் ஆதாரங்களை காண்பித்து, மொத்தம் ஒன்பது ராணுவ தளங்களில் தாக்குதல் நடத்தியதாக கூறியது.

தற்போது, சில நாட்கள் கழித்து, மேலும் இரண்டு இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அறிக்கை தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், மொத்தம் 11 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்குள் ஆயிரம் கிலோமீட்டர் சென்று தாக்குதல் நடத்திய இந்தியா, இனிமேல் என்னென்ன செய்ய முடியும் என்பதையும் பாகிஸ்தான் உணர்ந்து கொண்டிருக்கும். இந்த தாக்குதல், பாகிஸ்தான் பெற்ற பாடமாகவே கருதப்படுகிறது.