துரோகம் துரோகம் துரோகம்… ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்..!

  ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் சில இந்தியர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. குறிப்பாக, YouTuber ஜோதி…

youtuber 1

 

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் சில இந்தியர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, YouTuber ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நெருக்கமானவர்கள் தான் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தானுக்கு அவர் பல தகவல்களை அளித்திருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜோதியைப் போலவே இன்னொரு YouTuber கைது செய்யப்பட்டுள்ளார். “ஜான் மஹால்” என்ற YouTube சேனலை நடத்தி வருபவர் பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்வீர் சிங். இவரது YouTube சேனலுக்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், இவர்  போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் போலீசார் இது குறித்து கூறியபோது, ஜஸ்வீர் சிங் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் நெருக்கமான தொடர்பில் இருந்தார் என்றும், அவர்  தூதரக சேர்ந்தவர் என்றும், பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ. (ISI) உளவுத்துறைக்காக இயங்கி வருபவரிடம் ஜஸ்வீர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

மேலும், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியுடன் ஜஸ்வீர் சிங் நெருக்கமாக இருந்துள்ளார் என்றும், முதல் கட்ட விசாரணையில் இது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, டானிஷ் என்பவரின் அழைப்பின் பேரில் ஜஸ்வீர் அந்த விழாவில் பங்கேற்றுள்ளார் என்றும், அங்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் வ்லாகர்களை நேரில் சந்தித்துள்ளார் என்றும், அவர் 2020, 2021, 2024 ஆகிய மூன்று முறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவரது மொபைல், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் உள்ள பல தொலைபேசி எண்கள் அவரது சாதனங்களில் பதிவாகியுள்ளன என்றும், அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜோதி கைதானவுடன் சுதாரித்து தகவல்களை அழிக்க ஜஸ்வீர் சிங் முயன்றதாகவும், ஆனாலும் அந்த தகவல்கள் தற்போது மீட்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவருக்கும் ஜோதிக்கும் நெருக்கமான பழக்கம் இருந்ததா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்காக உளவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, “எங்கு பார்த்தாலும் துரோகம், துரோகம், துரோகம்” என்று நெட்டிசன்கள் தெரிவித்துக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.