இந்த துறையில் முக்கியமான நிறுவனம் ஒன்றான நைப் லிமிட்டெட் (Nibe Limited), தற்போது இஸ்ரேலின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிடமிருந்து பெரிய ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு USD 17.52 மில்லியன், அதாவது சுமார் ₹150 கோடி.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், நைப் லிமிட்டெட், 300 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளை தாக்கக்கூடிய யூனிவர்சல் ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து வழங்கும். இது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டது. இதை இந்தியா தயாரித்து ஏற்றுமதி செய்யும் முதல் முறை இதுதான்.
இந்த ஒப்பந்தம் Make in India மற்றும் Aatmanirbhar Bharat என்ற இந்தியாவின் தன்னிறைவு கனவிற்கு பெரிய ஊக்கமாக உள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
யுனிவர்சல் ராக்கெட் லாஞ்சர்கள் மிகவும் மேம்பட்டவை. உலகில் பல நாடுகள் பயன்படுத்தும் ராக்கெட் லாஞ்சர்களை விட இது நவீன தொழில்நுட்பத்தில் முன்னேறியதாகும். இந்த புதிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் மூலம், நைப் லிமிட்டெட் தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளது. அதே சமயம், இந்தியா உலக பாதுகாப்பு துறையில், குறிப்பாக நவீன ஆயுதங்கள் தரத்தில், ஒரு வலுவான இடத்தை பெற்று கொள்ளும்.
நைப் லிமிட்டெட் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து, இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்குமான நவீன ஆயுதங்களை உருவாக்குகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பு திறனை மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் முன்னேறிய இராணுவத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
நைப் லிமிட்டெட் இந்திய ராணுவத்திற்கான நவீன அமைப்புகளை வடிவமைத்து உருவாக்குகிறது. புதுமை, தன்னிறைவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியா ஒரு முக்கிய ஆயுத ஏற்றுமதியாளராக வளர நைப் லிமிட்டெட் முக்கிய பங்காற்றுகிறது.
மேலும் ஆபரேஷன் சிந்தூருக்கு பின் இந்தியா மற்றும் ரஷ்யா ஒரு புதிய பெரிய திட்டத்திற்கு மீண்டும் கை கோர்த்துள்ளன. இதற்கு முன், இந்த இரண்டு நாடுகளும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்கின. இது ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்டது.
இப்போது, இந்த ஏவுகணையின் இன்னும் மேம்பட்ட பதிப்பை உருவாக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இந்த புதிய பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்படும். இதற்கான தொழிற்சாலை உத்தரப்பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளது. ரஷ்யா இந்த மேம்படுத்தப்பட்ட ஏவுகணை வடிவமைப்பிற்கு முழு ஆதரவு அளிக்கிறது.