ஒரு இந்திய வம்சாவளியான பெண் லண்டனில் செல்போனில் பேசிக்கொண்டே வலது கையால் பிரியாணி சாப்பிடும் வீடியோவொன்று TikTok-இல் பதிவேற்றம் செய்யப்பட்டதுடன், மற்ற சமூக ஊடகங்களிலும் வைரலாகி கடும் விவாதத்தை தூண்டியுள்ளது.
இந்த வீடியோவில் அந்த பெண் தனது உணவை இயல்பாக கையால் எடுத்து சாப்பிடுகிறார், கையால் சாப்பிடுவது என்பது இந்தியர்களின் நடைமுறைகளில் ஒன்று. கைகளால் சாப்பிடுவது மரபாக கருதப்படுகிறது. ஏனெனில் கையை மட்டும் தான் இன்னொருவர் பயன்படுத்த வாய்ப்பில்லை, யாரும் பயன்படுத்தாத என்னுடைய சொந்த கையில் சாப்பிடுகிறேன் என்பது இதன் விளக்கமாகும்.
ஆனால் அந்த பெண் கையால் சாப்பிடுவதை சில பயணிகள் மற்றும் இணைய பயனர்கள் hygiene இல்லாதது என்றும், பொது இடத்தில் நாகரிகமின்றி நடந்து கொள்வதாகவும் விமர்சித்துள்ளனர். மேலும், பலர் அந்த பெண் செல்போனில் உரக்க பேசுவதையும் விமர்சித்து, பிற பயணிகளைத் தொந்தரவு செய்கிறார் என்று கூறினர். சிலர், சாப்பிடும் போது ஸ்பூனை பயன்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வீடியோவைப் பார்த்த பலர் அவருக்கு ஆதரவாகவும் பேசியுள்ளனர். “கைகளால் சாப்பிடுவது ஒரு கலாச்சார நடைமுறை; பிறருக்கு இடையூறு இல்லையெனில் அதைத் தவறாக மதிப்பீடு செய்ய வேண்டாம்” என சிலர் கூறியுள்ளனர். மேலும், அவருடைய அனுமதி இல்லாமல் அவரை வீடியோ எடுத்தது தவறு என்றும், அவரது தனிப்பட்ட உரிமைகளை மீறுவது மிகப்பெரிய குற்றம் எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இணையப் பயனர்களில் சிலர், “அவர் உங்களை தொந்தரவு செய்யவில்லை. அவர் சாப்பாட்டை ரசிக்கிறார், அவரை விட்டுவிடுங்கள். ஒருவேளை அவர் மிகவும் பசித்திருக்கும், அதனால் சாப்பிட்டிருக்கலாம். பிறரை இழிவுபடுத்த வேண்டாம். நான் சில வெள்ளையர்கள் கூட ரயிலில் கையால் பர்கர் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன்.”
இன்னொருவர் “பிரிட்டிஷ் மக்கள் ரயிலில் சிப்ஸ், சாண்ட்விட்ச் ஆகியவற்றை கையால் தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் ஒரு இந்தியப் பெண் கையால் பிரியாணி சாப்பிட்டால், அதுவே பெரிய பிரச்சனையாகி விடுகிறது.
இன்னொருவர், ‘”இப்படி ரயிலில் சாப்பிடுவது புத்தி இல்லாத செயல். இது எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக அல்லது தவறு இல்லையெனினும், இது நாகரிகமாக இல்லை. பொதுப் பயணத்தில் நம் நடத்தை குறித்து நாமே பொறுப்பு எடுத்து கொள்ள வேண்டும்.”
London.gov.uk இணையதளத்தின் படி, தற்போது லண்டன் ரயிலில் உணவு மற்றும் பானம் அனுமதிக்கப்படுகிறது. அதில் கூறப்படுவதாவது: “பயணிகள் உணவு அல்லது பானம் எடுத்துச் செல்லக் கூடாது என்று தடை விதிக்க எந்தத் திட்டமும் இல்லை. குறிப்பாக கோடை காலங்களில் பயணிகள் தண்ணீர் அல்லது பானங்கள் எடுத்து செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர். எனினும், பயணிகள் பொறுப்புடன் உணவு மற்றும் பானங்களை சாப்பிட வேண்டும் என்பதற்காக பல விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, துர்நாற்றமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம், குப்பைகள் போட்டுவிட வேண்டாம் என்பது போன்ற அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளது.
https://x.com/PSRMeansIT/status/1927849303457804410