நாம தினமும் சாப்பிடுற சோறுக்குப் பின்னலா பல உண்மைகள் மறைந்துள்ளன. அதை யாராவது கவனிச்சீங்களா? அதை எல்லாம் யார் கவனிக்கப் போறா? தினமும் வயித்துக்கு சாப்பாடு கிடைக்குதான்னுதான் பார்ப்போம். அதுவும் மதிய நேரத்துல எல்லாம் மூக்கு முட்ட சாப்பிட்டா உண்ட மயக்கம்னு சொல்லி தூங்கிடுவாங்க. அப்புறம் எங்கே சிந்திக்க நேரம்? வாங்க இதுதான் உங்களுக்கான நேரம். நாம சாப்பிடுற சாப்பாட்டுக்குப் பின்னால என்னென்ன சங்கதிகள் மறைஞ்சிக் கிடக்குன்னு பாருங்க.
நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். ஏன் நெல்லை அவிச்சு, காய வச்சு, அப்புறம் அரைக்கணும்? நேரா அரைச்சா என்ன? நெல்லை அவிக்காம நேரடியா அரைச்சா வர்றது தான் பச்சரிசி. அவிச்சு, காய வச்சு அரைச்சா வர்றது புழுங்கல் அரிசி. அவிக்கிறதுனால என்ன நன்மை? சத்து போகாது: நெல்லோட தோல்ல இருக்குற B-vitamin மாதிரி நிறைய சத்தெல்லாம் அவிக்கும்போது அரிசிக்குள்ள போயிடும். அதனால புழுங்கல் அரிசி ரொம்ப ஹெல்த்.
முழு அரிசி கிடைக்கும்: அவிச்ச நெல் கொஞ்சம் கெட்டியாகிடும்.
அதனால மில்லுல போடும்போது உடையாம, முழுசு முழுசா அரிசி கிடைக்கும். விவசாயிக்கு நஷ்டம் கம்மி. சுகர் ஏறாது: புழுங்கல் அரிசி சாப்பிட்டா, ரத்தத்துல சர்க்கரை மெதுவா தான் ஏறும். ஆனா பச்சரிசி சீக்கிரம் ஏத்திடும்.
பேஷண்ட்ஸ்க்கு புழுங்கல் அரிசி தான் டாக்டர்ஸ் சொல்வாங்க. ஜீரணம் ஈஸி: புழுங்கல் அரிசி சாதம் சீக்கிரம் ஜீரணம் ஆகும். சாப்பாடும் உதிரி உதிரியா வரும்.
பச்சரிசி எதுக்கு யூஸ் ஆகுதுன்னா, பொங்கல், பாயாசம், மாவு அரைக்க சூப்பரா இருக்கும். நம்ம பெரியவங்க ஏன் புழுங்கல் அரிசியை அதிகம் பயன்படுத்தினாங் கன்னு இப்ப உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே..!