கொலையும் செய்வாள் பத்தினி.. கணவரை கொலை செய்த மறுநாள் காதலனுடன் இரவை கழித்த சோனம்.. அதிர்ச்சி தகவல்..!

  இந்தூர் தம்பதிகள், மேகாலயா மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற போது, ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம், காதலனின் உதவியால் கொலை செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், கணவரைக் கொலை செய்த மறுநாள் வாடகை வீட்டில்…

sonam1

 

இந்தூர் தம்பதிகள், மேகாலயா மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற போது, ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம், காதலனின் உதவியால் கொலை செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், கணவரைக் கொலை செய்த மறுநாள் வாடகை வீட்டில் காதலன் ராஜுடன் சோனம் தங்கி ஒரு இரவைக் கழித்ததாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோனம் மற்றும் ராஜா இருவரும் மே 20 ஆம் தேதி மேகாலயாவுக்கு தேனிலவுக்காகப் புறப்பட்ட நிலையில், மே 11ஆம் தேதியே தனது காதலனுடன் ராஜாவைக் கொலை செய்ய சோனம் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. மே 23ஆம் தேதி இருவரும் தங்கியிருந்த ரிசார்ட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதே நாள்தான் அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருவருமே காணாமல் போனதாக முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜூன் இரண்டாம் தேதி ராஜாவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பின்னர்தான், இந்த கொலைக்கு சோனம் தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தன் கணவரைக் கொலை செய்த பின், சோனம் மேகாலயாவிலிருந்து சிலிகுரி வழியாக இந்தூரை அடைந்து, அங்கு கொலையாளி ராஜ் உடன் ஒரு வாடகை வீட்டில் ஒரு இரவைக் கழித்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் அவர் வீட்டிற்கு செல்வதற்காக கார் ஒன்றை ஏற்பாடு செய்த நிலையில், அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதுமட்டுமின்றி காய்ச்சலால் இருந்ததால் அவரை ஹோட்டல் ஒன்றில் போலீசார் கண்டுபிடித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த வழக்கில் நான்கு பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கணவரைக் கொலை செய்ய சோனம் அந்த நான்கு பேரை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அந்த நான்கு பேரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீசார் சோனமை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை திருமணத்திற்கு முன்பே தெளிவாக திட்டமிடப்பட்டதாகவும், சோனம், ராஜா ஆகிய இருவரும் தான் “மாஸ்டர் பிளான்” செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.