உங்களுக்கு சுகர் பிரச்சனையா? அப்படின்னா நீங்க சாப்பிட வேண்டிய உணவு இதுதான்!

சர்க்கரை நோயைக் (சுகர் பிரச்சனை) கட்டுப்படுத்த உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியப் பங்கு குதிரைவாலி அரிசிக்கு உண்டு. இது ஒரு சிறுதானிய வகை. இது முழு தானியம் என்பதால், ஊட்டச்சத்து மதிப்பு மிகுந்தது. இது குளூட்டன்…

சர்க்கரை நோயைக் (சுகர் பிரச்சனை) கட்டுப்படுத்த உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியப் பங்கு குதிரைவாலி அரிசிக்கு உண்டு. இது ஒரு சிறுதானிய வகை. இது முழு தானியம் என்பதால், ஊட்டச்சத்து மதிப்பு மிகுந்தது. இது குளூட்டன் இல்லாதது மற்றும் உணவு செரிமானத்திற்கு ஏற்றது. இதன் குறைந்த கிளைசமிக் இன்டெக்ஸ் மதிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.

குதிரைவாலி அரிசியை வழக்கமான அரிசிக்குப் பதிலாக நீங்கள் தினசரி சமையலில் பயன்படுத்தலாம். இதைக் கொண்டு குதிரைவாலி சாதம், குதிரைவாலி இடியப்பம், குதிரைவாலி பாயசம், உப்புமா அல்லது கீரைச் சாதம் போன்ற உணவுகளை தயாரிக்கலாம்.

குதிரைவாலி அரிசியின் கிளைசமிக் இன்டெக்ஸ் மதிப்பு மிகவும் குறைவு. இது இரத்த சர்க்கரை அளவை திடீரென உயரவிடாமல் கட்டுப்படுத்துகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இதைப் பாதுகாப்பாக சாப்பிடலாம். இந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்கி, உடலில் சர்க்கரை உறிஞ்சுதலைக் குறைக்கிறது. மேலும், இது பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

குதிரைவாலி அரிசியில் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. இது கொழுப்பு குறைந்த அரிசி வகை. எனவே, இதை சாப்பிடுவதால் உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி சாப்பிடக்கூடாது என்று கூறுவது உண்டு. அதற்கு பதிலாக இந்த குதிரைவாலி அரிசி சாப்பிட்டு வரலாம்.
குதிரைவாலி அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவு . இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, ஊட்டச்சத்துக்களையும் நிறைவாகத் தருகிறது.எனவே உங்கள் அன்றாட உணவில் இதை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.