நீ நடந்தால் நடை அழகு.. குரோஷியா நாட்டின் சாலையில் நடந்த பிரதமர் மோடி.. சாலையோர உணவகத்தில் உட்கார்ந்து பேச்சுவார்த்தை..!

  பிரதமர் நரேந்திர மோடி குரோஷியாவிற்கு மேற்கொண்ட பயணம், இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது. குரோஷியப் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் உடன் இணைந்து, சாக்ரெப் நகரின் மையப்பகுதியை சுற்றி பார்த்ததுடன்,…

modi

 

பிரதமர் நரேந்திர மோடி குரோஷியாவிற்கு மேற்கொண்ட பயணம், இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது.

குரோஷியப் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் உடன் இணைந்து, சாக்ரெப் நகரின் மையப்பகுதியை சுற்றி பார்த்ததுடன், சாலையோர உணவகம் ஒன்றில் இருவரும் மனம்விட்டு பேசினர். ஒரு இந்திய பிரதமர் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதால், இந்தப் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக குரோஷியாவில் இருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோரன் மிலானோவிச்-ஐயும் சந்தித்து பேசினார்.

குரோஷியாவிற்கான தனது இந்த பயணத்தில், பிரதமர் மோடி, பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் உடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதில், பாதுகாப்பு, மருந்துகள், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. செமிகண்டக்டர்கள், கப்பல் கட்டுமானம், போக்குவரத்து வசதிகள், மக்கள்-மக்கள் உறவுகள் எனப் பல புதிய துறைகளிலும் இணைந்து செயல்பட இரு தலைவர்களும் ஆர்வம் காட்டினர்.

இரு தலைவர்களும் நான்கு முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டனர். அவை: விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒரு கூட்டுத் திட்டம், கலாச்சார பரிமாற்றத் திட்டம், மற்றும் சாக்ரெப் பல்கலைக்கழகத்தில் ஒரு இந்தி இருக்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மேலும் இரு தலைவர்களும் உலகளாவிய பிரச்சினைகள், நடந்து வரும் மோதல்கள் குறித்து விவாதித்தனர். பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஒரு முக்கிய விவாத பொருளாக இருந்தது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு குரோஷியா வழங்கிய ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காக, குரோஷிய பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில் தான் இரு தலைவர்களும் குரேஷியா நாட்டின் சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் மையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருவரும் உட்கார்ந்தனர். அதன் பின் அந்த உணவகத்திலேயே இருவரும் சில முக்கிய விஷயங்களை மனமிட்டு பேசினர். இந்தியாவின் பிரதமர் தங்கள் நாட்டிற்கு வருகை தந்து ஒரு சாலையோர உணவகத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளன.