நைட் 12 மணிக்கு மேல தான் தூக்கமே வருதா? கண், சிறுநீர் மஞ்சளா இருக்கா? தொப்பையா? கால் வீக்கமா? உடனே கவனிங்க பாஸ்!

தலைப்பைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது அல்லவா. டோன்ட் ஒர்ரி. இந்த உலகத்துல எதுக்கு எடுத்தாலும் பயப்படக்கூடாது. அப்புறம் வாழவே முடியாது. ரோட்ல நடக்கும்போது கூட பின்னாடி வந்து கார் இடிச்சிடுமோன்னு பயம்தான்.…

தலைப்பைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது அல்லவா. டோன்ட் ஒர்ரி. இந்த உலகத்துல எதுக்கு எடுத்தாலும் பயப்படக்கூடாது. அப்புறம் வாழவே முடியாது. ரோட்ல நடக்கும்போது கூட பின்னாடி வந்து கார் இடிச்சிடுமோன்னு பயம்தான். அதனால ஏன் இப்படி நமக்கு மட்டும் வருதுன்னு நினைக்காதீங்க.

வரும் முன் காப்பவனே அறிவாளி. அதனால் நோய் வரும் முன் சில அறிகுறிகள் தென்படும். அதுக்கு என்ன செய்வது என்று ஆக்ஷன் எடுப்பதுதான் புத்திசாலித்தனம். வாங்க இந்த அறிகுறிகளுக்கு என்ன வியாதி? என்ன பண்ணலாம்னு பார்ப்போம்.

இஞ்சி, பூண்டு, கிராம்பு, மஞ்சள், வால்நட் ஆகியவற்றை உலர்த்தி தனித்தனியாக தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் எல்லாவற்றிலும் சேர்த்து இரண்டு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால், இயற்கையாகவே நம்முடைய உடலில் ஆன்டி-ஆக்சிடென்ட் அதிகரித்து நோய் எதிர்ப்பு தன்மை கூடுதலாகும். இதனால் கல்லீரல் சார்ந்த வியாதிகள் வராமல் தடுக்க முடியும்.

பாதிக்கப்பட்டவர் பகலில் மிக மிக சோர்வாக உணர்வார். ஆனால் இரவு பயங்கர சுறுசுறுப்பாக இருப்பார்கள். இரவு தூக்கமே வராது. மிட் நைட் 12மணிக்கு மேல் தான் தூக்கமே வரும். கல்லீரலில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான மிக முக்கியமான அறிகுறி இதுதான். அடுத்த அறிகுறிகள் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும்; சிறுநீரும் மஞ்சள் நிறமாக போகும். தவிர, வயிறும், கால்களும் வீங்க ஆரம்பிக்கும்.

நாம் சாப்பிடும் உணவு காரணமாக உடலில் கொழுப்பு அதிகமாகி, தொப்பையாக வயிற்றிலும், ஃபேட்டி லிவராக கல்லீரலிலும் படியும். இது முதல் பிரச்சனை. கல்லீரல் ரத்த அணுக்கள், நோயெதிர்ப்பு புரதங்கள், ஹார்மோன்கள், நொதிகள், செரிமானத்துக்கான பித்த நீர் ஆகியவற்றை உற்பத்தி செய்யும்.ரத்தம் உறைவதற்குத் தேவையான சில மூலப்பொருள்களையும் உற்பத்தி செய்கிறது.

நாம் சாப்பிடும் உணவில் இருக்கிற மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மூன்றையும் உடல் உறுப்புகளுக்கு தேவையானபோது வழங்கும். கிட்னியுடன் சேர்ந்து நம் உடலில் இருக்கிற நச்சுக்களை வெளியேற்றும். இன்னும் பல நூற்றுக்கணக்கான வேலைகளை கல்லீரல் நமது உடலில் செய்யும்.