கர்ப்பப்பை பிரச்சனை, விரை வீக்கம், வாயுப்பிடியில் இருந்து விடுதலை வேண்டுமா? நீங்க செய்ய வேண்டிய ஆசனம் இதுதான்!

யோக கலை உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர பெரும் பங்கு வகிக்கிறது. அவற்றில் ஒன்று சலபாசனம். அதை எப்படி செய்வது? செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்ப்போம்.…

யோக கலை உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர பெரும் பங்கு வகிக்கிறது. அவற்றில் ஒன்று சலபாசனம். அதை எப்படி செய்வது? செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்ப்போம்.

கால்களை உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கால்களை இறக்கும்போது வெளிமூச்சு. ஆஸ்துமா மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கான அற்புதமான ஆசனம் இது.

சலபாசனம் வயிற்றுக்கும், வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீரியத்தை தரும் அற்புதமானது. மலச்சிக்கலை அடியோடு அகற்றும். வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும். சலபாசனம் மூச்சு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கும் திறன் படைத்தது.

எப்படி செய்வது?

முதலில் ஒரு கெட்டியான தரைவிரிப்பின்மீது குப்புற படுக்கவும். கைகள் இரண்டும் உடலினை ஒட்டியபடி உள்ளங்கை இரு தொடைகளுக்கும் அடியில் தரையை அழுத்தியபடி வைத்துக்கொள்ளவும். இனி மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே இருகால்களையும் மடங்காமல் நேராக நீட்டிவைத்தபடியே மெதுவாக மேலே உயர்த்தவும்.

முகவாய், மார்பு, வயிறு, இடுப்பு வரை உள்ள பகுதி தரையில் நன்கு அழுத்தியபடி இருக்கவும். கால்கள் மட்டும் சாய்வான நிலையில் மேலே தூக்கியபடி இருக்க வேண்டும். மூச்சை அடக்கியபடியே சில வினாடிகள் இதே நிலையில் இருந்த பின் மூச்சை மெதுவாக வெளியே விட்டபடி கால்களை மெதுவாக கீழே இறக்கி பழைய நிலைக்கு வரவும். சில வினாடி ஓய்வுக்குப் பின் மீண்டும் முயற்சி செய்யவும். இப்பயிற்சியை 3 அல்லது 4 தடவை திரும்ப திரும்ப செய்யவும்.

நோய்களை துரத்தும் ஆசனம்

தினந்தோறும் இப்பயிற்சியை அதிகாலையில் பயின்று வருவது மிகுந்த நன்மை தரும். இப்பயிற்சியானது நுரையீரலுக்கு மிகுந்த வலிமையை தருகிறது. இது மூச்சு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பாக ஆஸ்துமா முதலிய நோய்களை துரத்துவதற்கு சிறந்த ஆசனம். நுரையீரல், இருதயம் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு, கல்லீரல் மற்றும் மண்ணீரலையும் பலப்படுத்துகிறது. கணையத்தை பலப்படுத்துவதில் இவ்வாசனம் மிக சிறப்பாக செயல்படுகிறது. குடல்புண், இரைப்பை புண், உதர விதான இறக்கம், சிறுநீர் கடுப்பு, முதுகு வலி முதலியவற்றை குணப்படுத்துகிறது.

வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம். உடல் எடை குறையும். அட்ரினல் சுரப்பி நன்கு வேலை செய்யும்.

இடுப்பு, முதுகின் கீழ்ப்பகுதி, இடுப்பெலும்புக் கூடு , வயிறு, தொடை , சிறுநீரகம், கால்கள் ஆகியவை ஊக்கமடைகின்றன. கணையம் நன்கு செயல்படுகின்றது. கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்களில் கல் அடைப்பு ஏற்படாது. மலச்சிக்கல், வாயுத்தொல்லை, நீரிழிவு, இடுப்பு வாயுப் பிடிப்பு ஆகியவை குணமாகும். கர்ப்பப்பை பிரச்சனை குணமாகும். விரை வீக்கம் நீங்கும். சுவாச பிரச்சனைகள் நீங்கும். உடல் லேசாக சுறுசுறுப்பானதாக, நன்கு செயல்படக்கூடியதாக ஆகிறது. புலன்களை கட்டுப் படுத்த இது உதவுகிறது.