படம் முழுக்க மனோரமா… சூட்டிங் நடந்ததோ ஒரே நாள்.. யார் அந்த இயக்குனர்? எந்த படம்?

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 2 வெற்றிப்படங்களில் மனோரமா நடித்ததற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன். சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு மனோரமா மாதிரி ஒரு கேரக்டர் இருந்தா நல்லாருக்கும்னு விசுவுக்கு…

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 2 வெற்றிப்படங்களில் மனோரமா நடித்ததற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன். சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு மனோரமா மாதிரி ஒரு கேரக்டர் இருந்தா நல்லாருக்கும்னு விசுவுக்கு யோசனை சொன்னவர் ஏவிஎம்.சரவணன்தான்.

அதே மாதிரி சரண் இயக்கத்தில் ஏவிஎம் தயாரித்த ஜெமினி படத்தில் மனோரமா இடம்பெற்றதற்கும் ஏவிஎம். சரவணன்தான் காரணம். அவர் படத்தைப் பார்த்ததும் சென்டிமென்ட் கொஞ்சம் கம்மியா இருப்பதாகச் சொன்னார். அப்போது பாடல்காட்சியைப் படமாக்க சரண் வெளிநாட்டுக்கு போயிருந்தார்.

அவரைத் தொடர்பு கொண்ட சரவணன் இந்தப் படத்துல சென்டிமென்ட் கொஞ்சம் கம்மியா இருக்கு. மனோரமா சம்பந்தப்பட்ட சீனை சேர்த்தா நல்லாருக்கும்னு ஆலோசனை சொன்னார். ஏவிஎம்.சரவணன் மனோரமாவிடம் 4 நாள்கள் நடிப்பதற்கு உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்னு கேட்டுள்ளார். அதற்கு ‘நான் எத்தனையோ ஏவிஎம்.படத்துல நடிச்சிருக்கேன். அதெல்லாம் இவ்வளவு சம்பளம் வேணும்கறதுக்காகவா நடிச்சேன்.

saran, manorama
saran, manorama

உங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும்னு தோணுதோ அதைக் கொடுத்தா போதும்’னு சொல்லிருக்காங்க மனோரமா. வெளிநாட்டுல இருந்து சரண் வந்ததும் மனோரமா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார். மனோரமா கால்ஷீட் கொடுத்தது 4 நாள்கள். ஆனா சரண் ஒரே நாளில் மனோரமா சம்பந்தப்பட்ட அத்தனைக் காட்சிகளையும் எடுத்து விட்டார்.

படத்தில் பார்க்கும்போது படம் முழுவதும் மனோரமா தான் இருப்பது போல தெரியும். ஆனா அதெல்லாம் ஒரே நாளில் படமாக்கினார் என்றால் அதுதான் சரண். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.