திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. ஈரான் – இஸ்ரேல் போரை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு.. போர் நிறுத்தம் இல்லையென ஈரான் பதிலடி..

  கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக…

iran vs usa

 

கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த தீவிர ஏவுகணைப் போருக்கு இது ஒரு முடிவை கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்தச் செய்தியை பகிர்ந்து சண்டையை நிறுத்தி கொண்ட இரு நாடுகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார். பல ஆண்டுகள் நீடித்து, வரும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்ததற்காக, இரு நாடுகளின் சகிப்புத்தன்மை, துணிச்சல் மற்றும் புத்திசாலித்தனத்தைப் டிரம்ப் வெகுவாக பாராட்டினார்.

அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவத் தளமான கத்தாரின் அல் உதேட் விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியதற்குப் பிறகு வந்துள்ளது. இந்த தாக்குதலை டிரம்ப் சாதாரணமாக கருதி, ஈரானிய அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு இது ஒரு “மிகவும் பலவீனமான பதில்” என்று வர்ணித்தார். மேலும், அமெரிக்காவிற்கு முன்கூட்டியே தகவல் அளித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவித்தார். இதன்மூலம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக கூறினார். இந்தத் தாக்குதலை தொடர்ந்து கத்தார் அதிகாரிகள் வான்வெளியை மூடினர், பின்னர் அது மீண்டும் திறக்கப்பட்டது.

போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் கூறிய சில நிமிடங்களில் ஈரான் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று சென்ற இடமெல்லாம் டிரம்ப் கூறிவந்த நிலையில் இந்தியா அதனை உறுதியாக மறுத்தது. இந்தியாவின் மறுப்பை கண்டு கொள்ளாமல் இரு நாடுகளின் வர்த்தக உறவை துண்டிப்பேன் என்று கூறினேன், உடனே இந்தியா பாகிஸ்தான் நாடுகள் போரை நிறுத்திவிட்டதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.

அதன் பிறகு கடைசியில் இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும் பேசி தான் போரை நிறுத்திக் கொண்டன என்று உண்மையை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் கூறிய அடுத்த சில நிமிடங்களிலேயே போர் நிறுத்தம் ஏற்படவில்லை என ஈரான் கூறி இருப்பது ட்ரம்பின் பொய் தொடர்ந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.