மனிதன் உயிர்வாழ சுவாசம் மிகவும் இன்றியமையாதது. அதற்கு உறுதுணையாக இருக்கும் உடல் உள்ளுறுப்பு தான் நுரையீரல். இதில் நோய்த்தொற்று எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள் புகைப்பிடிப்பதை ஒரு ஃபேஷனாகக் கருதுகிறார்கள். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் என்ற கொடிய நச்சு உடலுக்குத் தீங்கை விளைவிக்கிறது.
நுரையீரலை சேதப்படுத்தி உயிரையேக் கொல்கிறது. அதனால் அந்தப் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். சிகரெட் பிடிப்பதை நிறுத்திய உடன் நுரையீரல் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்கிறது. அத்தகைய ஆற்றல் நுரையீரலிடம் உண்டு. அது சரி. நுரையீரலை சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் தேங்கிய சளி படிப்படியாக வெளிவரும். இதைத்தான் நீரேற்றம் என்று சொல்கிறார்கள்.
வெள்ளரி, தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகள், நீரேற்றத்திற்கு உதவும். முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃப்ளவர் போன்ற உணவுகள் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளன, அவை நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். நுரையீரலை சுத்தம் செய்ய என்ன சாப்பிட வேண்டும்: