டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் 3வது நாள் வசூல்… நாளாக நாளாக மாஸ் ஏறுதே..!

கடந்த வெள்ளிக்கிழமை சந்தானம், சூரி, யோகிபாபு என 3 காமெடி ஹீரோக்களின் படங்கள் முதல் முறையாக ரிலீஸ் ஆனது. இது சினிமாவில் ஆரோக்கியமான போட்டி தான். அந்த வகையில் போட்டியில் வின்னர் யார் என்றால்…

கடந்த வெள்ளிக்கிழமை சந்தானம், சூரி, யோகிபாபு என 3 காமெடி ஹீரோக்களின் படங்கள் முதல் முறையாக ரிலீஸ் ஆனது. இது சினிமாவில் ஆரோக்கியமான போட்டி தான். அந்த வகையில் போட்டியில் வின்னர் யார் என்றால் அது சந்தானம்தான். இவர் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் ஹாரர் கலந்த காமெடியில் பின்னிப் பெடல் எடுத்து விட்டது.

அதற்கடுத்து சூரி நடித்த மாமன் படம் சென்டிமென்டாக வந்து ரசிகர்களின் கண்களைக் குளமாக்கியது. தொடர்ந்து வந்த யோகிபாபுவின் ஜோரா கையைத் தட்டுங்க படமும் மேஜிக் மேஜிக் என்று மாயாஜாலம் காட்டியதே தவிர பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை. இப்போது முதலிடம் பிடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கடந்த 3 நாள் வசூல் விவரம் என்னன்னு பாருங்க.

சேக்நில்க் அறிக்கையின்படி சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 3 கோடியாக இருந்தது. 2வது நாளில் 3.1 கோடி, 3வது நாளில் 3.30 கோடி என படிப்படியாக அதிகரித்தது. ஆக மொத்தம் 9.40 கோடியை வசூலித்துள்ளது.

காமெடிக்கு வறட்சி தமிழ்சினிமாவுக்கு வந்து விட்டது. அதனால்தான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த மதகஜராஜா கூட சந்தானத்தின் அல்டிமேட்டான காமெடியில் ஜோரா ஓடியது. சூரி காமெடி நடிகர் தான் என்றாலும் அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறி விட்டார். வடிவேலு படம் முன்னாடி மாதிரி இப்போது எடுபடவில்லை. அதனால்தான் கேங்ஸ்டர் படுதோல்வியைத் தழுவியது. யோகிபாபு காமெடியும் பெரிய அளவில் ஈர்ப்பதில்லை. அதனால் தான் சந்தானம் காமெடி கிங்காகவே இருக்கிறார்.