சாதுவாகவும், பழகுவதற்கு இனிமையான குணம் கொண்ட 10-ம் தேதியில் பிறந்தவர்களே! உங்களை நாடிவருபவர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்வீர்கள். நண்பர்களை அதிக அளவில் கொண்டு இருப்பீர்கள்.
யாருடைய கஷ்டத்திலும் கேட்காமல் உதவி செய்பவர் நீங்கள்; பலன் எதையும் எதிர்பாராமல் மற்றவர்களிடம் பழகக் கூடியவர். அனைவரும் பாராட்டும்படியாக நடந்து கொள்ளும் குணம் கொண்டவர் நீங்கள். பதவிகள், பட்டங்கள் உங்களைத் தேடி வரும்.
உங்களின் மனோபலம் தான் உங்களின் பலமாகும். உங்களின் மனோபலத்தினை மேலும் பலப்படுத்தி முன்னேறிச் செல்வீர்கள். தொழில்துறையில் சாதனை படைக்கக்கூடியவர்கள் நீங்கள்; எந்தவொரு தொழிலையும் முழு ஆர்வத்துடன் களம் இறங்கிச் செய்வீர்கள்.
உங்களின் எண்ணங்கள், ஆசைகளை மற்றவர்கள் மேல் திணிக்க மாட்டீர்கள். மேலும் பிறர் உங்களைக் காயப்படுத்தினாலும் புன்னகையுடன் சமாளிப்பீர்கள்.
சிறு சுடு சொல்லும் உங்கள் வாயில் இருந்து வராது. சமூகத்தில் உயர்ந்த நிலையுடனும் புகழ் பெற்றும் இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் மனதினை கவர்ந்து இழுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.
எந்தவொரு வேலையினையும் தயங்காமல் செய்து வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்பால் உங்களின் மிகப் பெரிய கனவுகளையும் அடைவீர்கள். ராஜாங்கப் பதவிகள் தேடி வரும்; அதிர்ஷ்டங்கள் பல நேரங்களில் உங்களுக்குக் கை கொடுக்கும்.
19 வயதில் உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தினைக் காண்பீர்கள், அதேபோல் 46 வயதுக்கு மேலான வாழ்க்கையில் மற்றுமொரு ஏற்றத்தினைப் பார்ப்பீர்கள். 60 வயதுக்கு மேல் இருப்போருக்கு சூழ்நிலைகள் அனைத்தும் அற்புதமான சூழ்நிலைகளாக இருக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள் மற்றும் நிறங்கள்
10 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 1,10,19
நீங்கள் தவிர்க்க வேண்டிய தேதிகள்: 4,13, 28
உங்களுக்கு உகந்த நிறங்கள்: பொன் நிறம், சந்தன நிறம்.
தவிர்க்க வேண்டிய நிறம்: கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.
நவரத்தினக் கல் – மாணிக்கக் கல் பயன்படுத்தவும்; மேலும் இதனை தங்கத்துடன் மட்டுமே போடவும்.
தொழில் துறை – கட்டுமானத் தொழில், எலெக்ட்ரிக்கல் சார்ந்த தொழில், எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, கெமிக்கல் விற்பனை போன்ற துறைகள் உங்களுக்கு ஏற்ற துறைகளாகும்.
சூர்ய பகவானை வழிபட்டு வந்தால் உங்களுக்குச் சாமர்த்தியத்தைக் கொடுப்பார்.
மேலும் சிவ பெருமான் கோவிலுக்குச் சென்று சிவனையும் பராசக்தியையும் கையெடுத்து கும்பிட்டு வாருங்கள். திங்கள் கிழமைகளில் அருகில் உள்ள சிவ பெருமான் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வாருங்கள்.