நம் உடல் எப்பவும் ஸ்மார்ட்டா அழகா இருந்தால் தான் நமக்கே ஒரு தன்னம்பிக்கை வரும். நம் உடலிலேயே ஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு இருந்தால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும். அவர்கள் ஏதோ ஒன்று பேச நமக்கு அது மன உளைச்சலைத் தந்து விடும்.
குறிப்பாக முக அழகு, உடல் பராமரிப்பில் அவ்வப்போது நாம் கவனம் செலுத்த வேண்டும். கொழுப்பு கட்டிகளை மரபணு கட்டிகள், பாரம்பரியமாக வருபவைதான்னு உதாசீனப்படுத்தக்கூடாது. அதனால் வலி இல்லாவிட்டாலும் அது அழகைக் கெடுக்கும். அதனால் அதை நம் உடலில் இருந்து நீக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
கொழுப்பு கட்டிகள் சிலருக்கு உடலில் ஆங்காங்கே இருக்கும். வலி இருக்காது. ஆனாலும் நம் உடல் அழகு இதனால் கெடுகிறதேன்னு ரொம்பவே ஃபீல் பண்ணுவாங்க. இந்தக் கட்டிகளை நீக்க என்னென்ன செய்யலாம்னு பார்க்கலாமா…
குறிப்பாக இத்தகைய கொழுப்பு கட்டிகள் மார்பு, கை, முழங்கை, இடுப்பு, வயிறு ஆகிய இடங்களில் வரும். பெண்களுக்கும் இது வருவதுண்டு. உடலில் கொழுப்பு அதிகமாக தேங்குவதால்தான் கட்டிகள் வருகின்றன. இவை பருமனாக இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒல்லியாக இருப்பவர்களுக்கும்கூட வரும். இதை எப்படி எளிய முறையில் கரைப்பதுன்னு பாருங்க.
மஞ்சள் மற்றும் நல்லெண்ணையைக் கலந்து கட்டி உள்ள இடத்தில் தடவலாம். உப்பு ஒத்தடம் கொடுக்கலாம். கொடிவேலி தைலம், தூஜா எண்ணையுடன் கலந்து தடவலாம். இதில் உப்பு ஒத்தடம் கொடுக்கும்போது அது கட்டியின் அளவைக் குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.