கணவன் மனைவிக்குள் வீட்டில் எப்போதும் சண்டை நடக்கும். வீட்டில் நிம்மதி இருக்காது. சிவபெருமானுக்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அபிஷேகத்துக்குத் தேன் வாங்கிக் கொடுக்கலாம். அதுவும் பௌர்ணமி அன்று வாங்கிக் கொடுப்பது விசேஷம். ருத்ராட்சையில் கௌரி சங்கர் அணியலாம். கணவன் அணிவது உத்தமம். அதை சரியானதா என்று கேட்டு வாங்க வேண்டும். நிறைய போலிகள் தான் கிடைக்கிறது.
அதே போல கணவன் மனைவி பிரச்சனை சுக்கிரன், செவ்வாயால் தான் வருகிறது. ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன். பெண்களுக்குக் களத்திரகாரகன் செவ்வாய். அதனால குடும்பத்தில் அன்னியோன்யம் குறையாமல் இருக்க சுக்கிரனுக்கு வெள்ளைப் பட்டு வாங்கிக் கொடுக்கலாம்.
செவ்வாய்க்கு பவளம் வாங்கிக் கொடுக்கலாம். அது முடியாதவர்கள் வெண்பட்டு வாங்கிக் கொடுக்கலாம். மெருன் கலர் வளையலும் வாங்கி துர்க்கைக்குக் கொடுக்கலாம். அந்தக்காலத்துல முன்னோர்கள் மாங்கல்யத்துல பவளம் சேர்த்துப் போடுவார்கள். மனிதனின் முதுகெலும்புதான் பவளம். மனைவி மாங்கல்யத்தில் பவளம் போட்டால், கணவரின் ஸ்தானம் செவ்வாய். அதனால் அவர் ஆக்டிவேட் ஆவார்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் அணிவதை விட மனைவி பவளம் அணிந்தால் தான் கூடுதல் பலனைத் தரும். அந்த வீட்டில் பொருளாதார நெருக்கடி, உடல்நல பாதிப்பும் வராது. ரத்த ஓட்டத்துக்கு அதிபதி செவ்வாய் தான். பொருளாதார பிரச்சனைகளே அந்தக் குடும்பத்தில் வராது.
பெரும்பாலான வீடுகளில் பணப்பிரச்சனையால் தான் ஓயாமல் சண்டை வரும். நமக்கு ஒண்ணு சரின்னு மனதுக்கு தோணுச்சுன்னா அதை செய்து பார்ப்போம் அல்லவா. அது மாதிரி தான் இதுவும். நல்ல விஷயம் தான் என நம்பிக்கையோடு நினைத்து செய்து பாருங்கள். அந்த நம்பிக்கையே உங்களுக்கு வெற்றியை உண்டாக்கி விடும். மேற்கண்ட தகவலை பாலா உபாசகர் ஜோதிடர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.