அமெரிக்க பாராளுமன்றத்தில் செக்ஸ் வைத்து கொண்ட ஊழியர்.. நான் என் வேலையை தான் செய்தேன் என பேட்டி..!

  இந்தியாவில் பாராளுமன்றம் இருப்பது போல் அமெரிக்காவில் செனட் என்று இருக்கும் நிலையில் செனட் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் அநத கட்டிடத்திலேயே பெண் ஒருவருடன் செக்ஸ் வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை…

senet

 

இந்தியாவில் பாராளுமன்றம் இருப்பது போல் அமெரிக்காவில் செனட் என்று இருக்கும் நிலையில் செனட் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் அநத கட்டிடத்திலேயே பெண் ஒருவருடன் செக்ஸ் வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா செனட் ஊழியராக பணியாற்றிய ஏடன் மாஸ்-செரோப்ஸ்கி, செனட் என்பவர் தனது அலுவலக அறையில் உடலுறவு கொண்டு அதை வீடியோவாக பதிவு செய்த விவகாரத்தில் வேலை இழந்தபோதும், தனது செயலில் “எந்த வருத்தமும் இல்லை” எனவும், நான் என் வேலையை தான் செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார். எனது வேலை சலிப்புடன் இருந்ததால் புத்துணர்ச்சிக்காக இதை செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு குடிபோய் விட்டார்.

நியூயார்க் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நான் செனட்டில் செக்ஸ் செய்ததை வருத்தப்படவில்லை,. நான் ஒன்பது மணி நேரம் வேலை செய்து, தினமும் என் மூளையை விரட்டும் அளவுக்கு சலிப்பாக உட்கார்ந்திருந்தேன். அதனால் எனக்கு புத்துணர்ச்சிக்கு என்ன தேவையோ அதை செய்தேன்’ என்றார்.

இவர் தனது செக்ஸ் வீடியோவை பதிவு செய்த இடம் Hart 216 எனும் செனட் அறை. இதில் முன்னதாக ஜேம்ஸ் கோமி ரஷ்ய தேர்தல் தலையீடு பற்றி சாட்சியமளித்த இடம், நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பெர்க் பதவியேற்ற இடம் ஆகும். அந்த அறையை அவர் திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்தார். மேலும், அந்த அறையில் கடைசியாக அமர்ந்தவர் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் அமி குலோபுசார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் தனது புத்துணர்ச்சி வேலையை முடித்ததும் அதுகுறித்த வீடியோவை தனது நண்பர்களுடன் பகிர்ந்தார். இந்த வீடியோ வெளியான பின்னர் தான் சர்ச்சையானது.

பின்னர், நெருக்கடிக்குள்ளான அவர் மன அழுத்தத்தால் சிகிச்சைக்காக சில நாட்கள் மனநல வார்டில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பிறகு ஆப்பிரிக்கா, போர்ச்சுக்கல், கனேரி தீவுகள் வழியாக பயணம் மேற்கொண்டு, தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார்.

இந்த சம்பவம் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்ததா என்பதை சொல்ல முடியவில்லை. உண்மையில் நான் செனட்டில் செக்ஸ் செய்ததற்கான காரணமே, அந்த வேலை எனக்கு சகிக்க முடியாத அளவுக்கு சலிப்பாக இருந்தது,” என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், செனட்டில் இதுபோல் நடந்தவர்கள் பலர் உள்ளதாகவும், நானும் சிலரைக் குறிப்பிட்டு என் சர்ச்சையை இன்னும் பெரிதாக்கலாம் என ஒரு கணம் யோசித்தேன். ஆனால் என்னால் அவர்களும் பாதிப்படைய வேண்டாம் என நான் யாரையும் காட்டி கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் அவர் “Senate Twink Official” என்ற OnlyFans கணக்கின் மூலம் விளம்பரம் செய்து வருகிறார். இந்த சர்ச்சையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வீடியோவை அப்போதைய செனட்டர் கார்டினின் அலுவலகம் வெளியேறிய பின், Capitol Police விசாரணை நடத்தி, இது தவறான செயல் எனினும் சட்டப்படி குற்றமாக இல்லை என்பதால் வழக்கு பதிவு செய்யவில்லை என அறிவித்தது.