தூங்காமல் சிலர் நீண்ட நேரமாக வேலை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிஸ்டம் முன்னாடி உட்கார்ந்து கொண்டு வேலை செய்தபடி இருப்பார்கள். நள்ளிரவு தாண்டியும் இந்த வேலையைப் பார்ப்பார்கள்.
அப்புறம் சாவகாசமாக 2 மணிக்கு மேல் தூங்கி விடியற்காலம் எழுந்து குளித்து ஆபீஸ்க்கு வேலை செய்வர். இதெல்லாம் உங்க உடம்புக்கு நீங்களே செய்ற கெடுதல். முக்கியமாக உங்க மூளை தன்னைத்தானே சாப்பிட ஆரம்பிக்குது. ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் உண்மை. வாங்க பார்க்கலாம்.
போதுமான தூக்கம் இல்லாதபோது , மூளை உண்மையில் தன்னைத்தானே சாப்பிட ஆரம்பிக்கும். பொதுவாக, ஆஸ்ட்ரோசைட்டுகள் எனப்படும் சிறப்பு மூளை செல்கள் கழிவுகளை சுத்தம் செய்து பலவீனமான அல்லது சேதமடைந்த நரம்பியல் இணைப்புகளை அகற்ற உதவுகின்றன. ஆனால் தொடர்ந்து தூக்கமின்மையால், இந்த செல்கள் அதிகமாக செயல்படத் தொடங்கி ஆரோக்கியமான மூளை ஒத்திசைவுகளை கூட உடைக்கத் தொடங்குகின்றன.
மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், மூளையில் உள்ள மைக்ரோக்லியா எனப்படும் நோயெதிர்ப்பு செல்கள் அவற்றின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன. இந்த வகையான அதிகப்படியான செயல்பாடு அல்சைமர் போன்ற மூளை நோய்களின் ஆரம்ப கட்டங்களில் நடப்பதை ஒத்திருக்கிறது – இது நீண்டகால தூக்கமின்மை நீண்டகால மூளை சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது.
பணம் சம்பாதிக்கிறது மட்டும் நம் குறிக்கோள் என்பது நல்ல விஷயம்தான். அதற்காக உடலைக் கெடுத்து தான் செய்ய வேண்டும் என்பது தவறு. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.? அதனால் உங்கள் மூளையைப் பத்திரமா பார்த்துக்கோங்க.