உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!

காலம் பொன்போன்றதுன்னு சொல்வாங்க. போனா திரும்பி வராது. எவ்வளவு ரூபாய் விலை கொடுத்தாலும் கிடைக்காது. அதனால செய்ய வேண்டிய காலத்தில் செய்ய வேண்டிய வேலையை சரியாகத் திட்டமிட்டு செய்தால் வாழ்வில் வெற்றி உறுதி. பொழுது…

காலம் பொன்போன்றதுன்னு சொல்வாங்க. போனா திரும்பி வராது. எவ்வளவு ரூபாய் விலை கொடுத்தாலும் கிடைக்காது. அதனால செய்ய வேண்டிய காலத்தில் செய்ய வேண்டிய வேலையை சரியாகத் திட்டமிட்டு செய்தால் வாழ்வில் வெற்றி உறுதி. பொழுது போகலன்னு சிலர் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவர். சிலர் தேவையில்லாத விஷயங்களைப் பேசி நம் பொன்னான காலத்தை வீணாக்குவார்கள். அதை நாம் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

அனைவருமே காலம் செல்ல செல்ல முதுமையை சந்திக்கும் காலம் வரும். அப்போது நிச்சயமாக நமது இறந்த காலத்தை எண்ணி பார்ப்போம். உங்களது இளமை காலங்கள் வேண்டா வெறுப்பாக சலிப்புகளோடு கடத்தப்பட்ட நாட்களின் கோர்வையாக இருக்கவேண்டுமா! அல்லது உங்களின் கனவுகோட்டையை படிப்படியாக கட்டி எழுப்பிய நாட்களின் கோர்வையாக இருக்கவேண்டுமா… இதில் அனைவருமே இரண்டாவதாக கூறியதையே தெரிவு செய்வோம்.

ஆனால் நம்மில் எத்தனை பேர் அதை சரியாக செய்கின்றோம். இங்கு நாம் கூறும் விசயங்கள் ஏதேனும் உங்களிடம் காணப்பட்டால் உங்களது நேரத்தை அநியாயமாக வீணடித்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது புரியும் . அதை சரிசெய்து கொள்ளும்போது நீங்கள் உங்கள் இலக்குகளை சரியாக அடைய முடியும்.

உங்களது எதிர்காலத்துக்காக அதிகமாக திட்டமிட்டுக் கொண்டே இருப்பது, ஆனால் செயல்பாட்டிற்கான முயற்சி எதுவும் இருக்காது. இது உங்களது வெற்றிக்கு எந்த வகையிலும் பயன் தராது. ஒரு செயலை செய்ய நேரம் ஒதுக்கி செய்து கொண்டிருக்கும்போது அதில் தேவையில்லாத விஷயங்களுக்காக அந்த பயனுள்ள நேரம் ஆனது வீணடிக்கப்படுகிறது எனில் அந்த செயலை சரியான திட்டமிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் போகும்.

உங்களது தூக்கத்தை கெடுக்கும் விஷயங்கள் ஏதேனும் இருந்தால் அவை எது என்பதை கண்டறிந்து உடனடியாக அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் சரியான தூக்கமின்மை உங்களது செயலுக்கு இடையூறாக அமைந்துவிடும்.
நீங்கள் உங்களது சொகுசு வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா, அப்படியெனில் உங்களுக்கான வாய்ப்புகளை தினம் தினம் இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தம். அத்தோடு உங்களது நேரத்தையும் இழந்துகொண்டு இருக்கிறீர்கள்.

நீங்கள் வாழும் வாழ்க்கையில் திருப்தி இல்லையெனில் உங்களது வாழ்க்கையே வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தம். எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி தோன்றினாலோ, அடிக்கடி மனஅழுத்தம் ஏற்பட்டாலோ, வாழும் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லையென்றால் உங்களது வாழ்க்கையில் திருப்தி இல்லையென்று அர்த்தம். இதனாலும் உங்களது நேரம் அதிக அளவில் வீணடிக்கப்படுகிறது என்பது அர்த்தமாகிறது.