ஜி.வி.பிரகாஷ் இடத்தை பிடித்த யுவன் ஷங்கர் ராஜா! அப்போ படத்தில் பாட்டு வேற லெவல் தான்..

By Velmurugan

Published:

கார்த்தி மற்றும் இயக்குனர் மித்ரன் கூட்டணியில் மாபெரும் வெற்றிப் பெற்ற சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ள தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் இரண்டாம் பாகம் குறித்து உறுதி செய்திருந்தார்.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சங்கி பாண்டே முக்கிய வில்லனாக நடித்துள்ளார். பி.எஸ் மித்ரன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர், இதில் பிரபல நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் சர்தார் படத்தின் முடிவில் ஒரு கிளிப்பிங் திரையிட்டு சர்தார் பகுதி 2 இல் தொடரும் என்று அறிவித்தனர். இப்போது அதன் தொடர்ச்சி பற்றிய சமீபத்திய அப்டேட் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

தற்பொழுது படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் படம் திரைக்கு வரலாம், ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சர்தார் 2 படத்திற்க்கு புதிய இசையமைப்பாளரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் இரண்டாம் பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சர்தார் முதல் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் 2 படத்தில் ஜிவிக்கு பதிலாக யுவன் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்தியின் சர்தார் 2 படத்தில் மித்ரன் மற்றும் யுவன் இடையே மூன்றாவது முறையாக கூட்டணி அமைய உள்ளது. இவர்கள் இருவரும் இதற்கு முன் இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

நடிகர் கார்த்தி சந்திர போஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் அதன் தொடர்ச்சியிலும் மீண்டும் நடிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

யுவன் பாடலை பார்த்து முன்னணி ஹீரோவுக்கு ஆப்பு வைத்த அனிருத்!

இதற்கிடையில், கார்த்தி அடுத்ததாக இயக்குனர் ராஜுமுருகனுடன் ஜப்பான் என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த பான்-இந்தியன் திரைப்படம் 2023 தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் உங்களுக்காக...