சிவாஜி உயிர் பிரியும் கடைசி நிமிடத்தை பார்த்த தயாரிப்பாளர்.. உருக வைக்கும் தகவல்..!

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உயிர் பிரியும் கடைசி நிமிடத்தை பார்த்தது நான் மட்டுமே என பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரையுலகில் ஒரு சகாப்தமாக இருந்தவர். இன்றைய திரையுலக நட்சத்திரங்களுக்கு ஒரு குருவாக இருந்தவர். அவருடைய நடிப்பின் பாதிப்பு இல்லாமல் கமல் உள்பட எந்த ஒரு நடிகரின் நடிப்பும் இருக்காது. அந்த அளவுக்கு அவர் நடிப்பில் உள்ள அனைத்து பரிணாமங்களையும் விட்டுச் சென்றவர்.

ஒரு காட்சியை கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்த ‘திரிசூலம்’.. சிவாஜியின் 200வது படம்..!

Sivaji 2 1

சிவாஜி கணேசனின் கடைசி காலம் என்பது மிகவும் சோகமானது என்றும் அவர் தனது குடும்பத்தினரை குறிப்பாக தனது பேத்தியை நினைத்து கடைசி காலத்தில் வருந்தியதாகவும் தெரிகிறது. சிவாஜி கணேசன் பேத்தியைத்தான் சுதாகரன் திருமணம் செய்திருந்தார். தனது பேத்தியின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று சிவாஜி கணேசன் ஒவ்வொரு நிமிடமும் வருத்தப்பட்டு இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் சிவாஜி கணேசனை வைத்து முதல் முதலாக ‘மன்னவரு சின்னவரு’ என்ற படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். அதற்கு முன் சிவாஜியை தூரத்தில் நின்று பார்த்த தாணு முதல் முதலாக அவரை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது

அது மட்டுமின்றி அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது. மேலும் இந்த படத்திற்காக தாணு சிவாஜிக்காகவே ஒரு பாடலை எழுதினார். அதுதான் மன்னவரு சின்னவரு என்ற பாடல்.

Sivaji 1

இந்த நிலையில் படம் வெளியாகி ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் ஒருநாள் சிவாஜி அழைப்பதாக தாணுவுக்கு தகவல் வந்தது. அவருடைய வீட்டிற்கு சென்று தாணு பார்த்தபோது மிகவும் சோகமாக இருந்தார் என்றும் நான் ஏன் உயிர் வாழ வேண்டும் என் பேத்தியை இந்த நிலையில் பார்ப்பதற்கு என்னை எதற்காக கடவுள் உயிரோடு வைத்திருக்கிறார் என்று தன்னிடம் வருந்தியதாகவும் தான் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்ததாகவும் கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

மேலும் சிவாஜி தன்னிடம் அரசியல் ஒரு சாக்கடை தயவு செய்து அரசியலில் மட்டும் ஈடுபடாதே என்று தனக்கு அறிவுரை சொன்னதாகவும், அதுவரை தனக்கு அரசியலில் மிகுந்த ஆர்வம் இருந்த நிலையில் அவருடைய அறிவுரையை ஏற்றுக்கொண்டு அரசியல் இருந்து தான் கொஞ்சம் கொஞ்சமாக விலகி விட்டதாகவும் கலைப்புலி தாணு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த சந்திப்பிற்கு பிறகு சரியாக 15 நாளில் அவர் உயிர் பிரியும் தருவாயில் இருப்பதாக தாணுவுக்கு தகவல் வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற அவர் சிவாஜி கணேசனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அவர் உயிரோடு இருப்பார் என்றும் எனவே கடைசியாக அவர் உயிர் பிரிவதை பார்க்க விரும்புபவர்கள் மட்டும் அறைக்கு செல்லலாம் என்றும் டாக்டர் கூறியதை கேட்டார்.

thanu

சிவாஜி கணேசனின் மகன்கள், மகள்கள் உள்பட யாரும் அவர் உயிர் பிரிவதைப் பார்க்கும் தைரியம் இல்லை என்று கூறிவிட்டனர். இந்த நிலையில் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு நான் அந்த அறைக்கு சென்றேன் என்றும் கண்கலங்க அவருடைய உயிர் பிரியும் கடைசி நிமிடத்தை நான் பார்த்தேன் என்றும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்துல நடிச்சது சிவாஜியே இல்லை.. ஆஸ்கர் நிர்வாகிகள் நம்ப மறுத்த ’தெய்வ மகன்’ திரைப்படம்..!

சிவாஜி என்ற ஒரு சகாப்தம் கடைசி மூச்சு என் கண் முன்னால் தான் பிரிந்தது என்று அவர் அந்த பேட்டியில் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...