யுவன் பாடலை பார்த்து முன்னணி ஹீரோவுக்கு ஆப்பு வைத்த அனிருத்!

ஷாருக்கான் நடிப்பில் உருவாக்கி உள்ள ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலான  ‘வந்த இடம்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஒரு சிலருக்கு இந்த பாடல் இசை யுவன் சங்கர் ராஜா இசை போல இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார் இயக்குனர் அட்லி. இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற ஜவான் படத்தின் முதல் பாடலான  ‘வந்த இடம்’ என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலுக்கு மட்டும் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாடலுக்காக ஹைதராபாத், மும்பை, மதுரை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த ஆயிரம் நடன கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் விவேக் எழுத்தில் அனிருத் இசை மற்றும் குரலில் வெளியாகி உள்ளது. இந்த பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இந்த பாடலைக் கேட்ட உடனே அனிருத்தின் பாடல்கள் மீது வழக்கமாக ஏற்படும் சந்தேகம் இந்த பாடல் மீதும் எழுந்துள்ளது.

விஜய்யின் 50 வது படம் குறித்து மோசமான அனுபவத்தை பகிர்ந்த தமன்னா! இது தான் காரணமா..

ஆனால் இந்த முறை ஜவான் பாடலின் இசையை கேட்டவுடன் இது அதுல என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இது மாநாடு படத்தின் யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்பு பீஜியம் போல அப்படியே இந்த பாடலின் ஆரம்பத்தில் உள்ளதை கேட்டு தமிழ் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே அட்லீ மற்றும் அனிருத் மீது காபி குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இந்த கூட்டணி எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...