தளபதி 68 படத்தில் விஜய்க்கு என்ன கேரக்டர் தெரியுமா? மாஸ் அப்டேட்!

Published:

லோகேஷ் கனகராஜுடன் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடித்து தற்பொழுது போஸ்ட் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அடுத்ததாக தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்றுள்ளார் நடிகர் விஜய். மேலும் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் 68வது படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்பொழுது கசியத் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் குற்றவியல் புலனாய்வாளர்கள் குழுவை வழிநடத்தும் மூத்த சிபிஐ தலைமை அதிகாரி வேடத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் சகோதரனாகவும் குற்றங்களைத் தீர்ப்பதில் உதவியாளராகவும் நடிகர் ஜெய் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் தளபதி 68 இன் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று சமீபத்தில் வெங்கட்பிரபு உறுதிப்படுத்தியதால், படத்தின் புதுப்பிப்பிற்காக ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

யுவன் பாடலை பார்த்து முன்னணி ஹீரோவுக்கு ஆப்பு வைத்த அனிருத்!

தற்காலிகமாக தளபதி 68 என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இப்படம் 2024ல் திரைக்கு வர உள்ளது.

இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 25வது படம் மற்றும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் உங்களுக்காக...