விஜய்யின் அம்மா ஒரு பெரிய டைரக்டரா? விஜய்யின் முதல் படத்திற்கு மட்டும் இல்லாமல் 13 படத்திற்க்கு கதை எழுதிய சோபா சந்திரசேகர்!

Published:

தென்னிந்திய திரை உலகின் உச்ச நட்சத்திரமாகவும், இளைஞர்களின் மாஸ் ஹீரோவாக தளபதி விஜய் வலம் வருகிறார்.விஜய் தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்க உள்ளார் விஜய்.

இந்நிலையில் விஜய்யின் திரை வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் அவரது தந்தை மற்றும் இயக்குனரான எஸ். ஏ. சந்திரசேகர் தான். விஜய் தனது தந்தை இயக்கத்தில் தான் முதல் முதலில் நடிக்க தொடங்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

ஆனால் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்திற்கு அவரது அம்மாவின் பங்களிப்பும் மிக முக்கியமானது. அந்த வகையில் விஜய்யின் படத்திற்கு அவரது அம்மா சோபா சந்திரசேகர் கதை எழுதியுள்ளார் என்ற ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. சோபா சந்திரசேகர் குறித்து அவர் எந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார் என விரிவாக பார்க்கலாம்..

அதாவது முதலாவதாக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்த பட்டணத்து ராஜாக்கள் திரைப்படத்திற்கு கதை எழுதியவர் சோபா சந்திரசேகர் அவர்கள் தான். இந்த படம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு 13-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது .

இரண்டாவதாக கேப்டன் விஜயகாந்த் நடித்த நீதியின் மறுபக்கம் திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இந்த படம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு 50வது திரைப்படமாக அமைந்தது.

மூன்றாவதாக கேப்டன் விஜயகாந்த் நடித்த எனக்கு நானே நீதிபதி திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் சோபா சந்திரசேகர்.இந்த படம் கேப்டன் அவர்களுக்கு 58வது திரைப்படமாக அமைந்தது.

நான்காவதும் கேப்டன் விஜயகாந்த் நடித்த ராஜநடை திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இந்த படம் விஜயகாந்த் அவர்களுக்கு 91வது திரைப்படமாக அமைந்தது

ஐந்தாவது 1991ஆம் ஆண்டு வெளியான நண்பர்கள் திரைப்படத்திற்கு டைரக்டராக இருந்தது மட்டும் இன்றி இந்த படத்திற்கு கதையும் எழுதியுள்ளார் சோபா சந்திரசேகர்.

ஆறாவதாக 1992 ஆம் ஆண்டு வெளியான இன்னிசை மழை திரைப்படத்திற்கும் டைரக்டராக இருந்தது மட்டும் இன்றி இந்த படத்தின் கதையும் எழுதியுள்ளார்.

ஏழாவதாக விஜய் அவர்கள் ஹீரோவா நடித்த முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு திரைப்படத்திற்கு கதை எழுதியது சோபா சந்திரசேகர் அவர்கள் தான்.

எட்டாவதாக விஜயகாந்த் மற்றும் விஜய் இணைந்து நடித்த செந்தூரப்பாண்டி திரைப்படத்திற்கு சோபா சந்திரசேகர் கதை எழுதியுள்ளார்.இந்த செந்தூரப்பாண்டி திரைப்படம் நடிகர் விஜய் அவர்களுக்கு இரண்டாவது திரைப்படம், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு 112 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பாக்யராஜின் காதலுக்கு உதவிய வடிவுக்கரசி! நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

ஒன்பதாவதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ரசிகன் திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். அதை தொடர்ந்து பத்தாவதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தேவா திரைப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார் சோபா சந்திரசேகர்.

அடுத்து 11வதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான விஷ்ணு திரைப்படத்திற்கு கதை எழுதியதும் சோபா சந்திரசேகர்.

அடுத்து பன்னிரெண்டாவதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். சோபா சந்திரசேகர் அவர்கள் கடைசியாக நடிகர் நரேன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

 

மேலும் உங்களுக்காக...