நடிகர் பாக்யராஜின் காதலுக்கு உதவிய வடிவுக்கரசி! நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் இப்போதும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி பிரபல நடிகை வடிவுக்கரசி. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பழமொழிகளிலும் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை வடிவுக்கரசி 1979-ல் வெளியான கன்னிப்பருவத்திலே என்கின்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஆரம்ப காலகட்டத்திலேயே கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லாமல் இருந்த வடிவுக்கரசி ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தான் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதற்கு காரணம் கதாநாயகி என்றால் டான்ஸ் ஆட வேண்டும், கதாநாயகனோடு ரொமான்ஸ் பண்ண வேண்டும் அது எனக்கு சுத்தமாக வராது அதனால் தான் அந்த மாதிரி கேரக்டரை தவிர்த்து வந்தேன் என்றும் வடிவுக்கரசி கூறி இருக்கிறார்.

அதோடு அவர் நடிகர் ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படத்தில் பாட்டியாக நடித்து பலரையும் மிரட்டி இருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி வடிவுக்கரசி பேசியிருக்கிறார்.

அப்போது நான் கன்னிப்பருவத்திலே என்ற திரைப்படத்திற்க்காக 30 நாள் சூட்டிங்கில் திருச்சிக்கு சென்றதாக கூறினார், அப்போது தனக்கு வசனங்கள் எல்லாம் பாக்கியராஜ் தான் சொல்லி கொடுத்ததாகவும் அப்போது தான் பிரவீனாவிற்கும் பாக்யராஜுக்கும் காதல் விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் என்னை பார்க்க வருவது போல் பாக்கியராஜ் பிரவீனாவை பார்ப்பார்.

அதிலும் பாக்கியராஜ் யாராவது ஒரு பெண்ணிடம் பேசினால் உடனே நான் பிரவீனாவிற்கு சொல்லிவிடும் வேலையைத்தான் செய்து வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு மட்டும் அம்பாசிடர் கார் கொடுத்து அனுப்புவார்கள். அப்போது பாக்யராஜ் சாரை காரில் ஏற்றிக்கொண்டு சென்றபோது பிரவீனா பற்றி பேசிக்கொண்டே வருவார்.

இதை பார்த்த சிலர் அந்த படத்தின் இயக்குனரான நடிகர் ராஜ்கிரன் சாருக்கு கால் செய்து வடிவுக்கரசியும் பாக்யராஜிம் காதலிக்கிறார்கள் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள் நைட் காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ராஜ்கிரண் இங்கு அடுத்தவர்கள் என் காசுல ஹனிமூன் கொண்டாடுகிறார்கள் என்று கோபத்தில் சொல்ல… அதைக் கேட்டு கோவமான நான் உடனே அங்கிருந்து சேரை எடுத்து தூக்கி வீசி கத்தியதாக கூறினார்.

கடைசி நேரத்திலும் கமலின் மகளுக்காக எம்ஜிஆர் கொடுத்த அன்பு பரிசு என்ன தெரியுமா?

அப்போதைய செய்திகளில் வடிவுக்கரசிக்கு பேய் பிடித்து விட்டது என்றெல்லாம் சொன்னார்கள் அப்போது அந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது என்றும் அந்த பேட்டியில் வடிவு கடைசி ரகசியங்களை உடைத்து இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...