பாலு மகேந்திராவால் இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா? விழுந்து விழுந்து சிரிக்க வைத்த படம்..!

By Bala Siva

Published:

பொதுவாக பாலு மகேந்திரா படங்கள் என்றாலே சீரியஸாக இருக்கும் என்பதும் அழுத்தமான காட்சிகள் கொண்டதாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. அதற்கு உதாரணமாக ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’, ‘வீடு’, ‘மறுபடியும்’ உள்ளிட்ட படங்களை கூறலாம். ஆனால் பாலு மகேந்திரா வித்தியாசமாக முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சம் கொண்ட ஒரு காமெடி படத்தையும் எடுத்து உள்ளார். அதுதான் மோகன் நடித்த ‘ரெட்டைவால் குருவி’. இந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடி உச்ச கட்டத்தில் இருக்கும்.

மோகன் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக இருப்பார்கள். குழந்தைக்காக மோகன் ஏங்குவார், ஆனால் அர்ச்சனா இன்னும் சில ஆண்டுகள் ஆகட்டும் என்று கூறுவார். இந்த நிலையில் தான் அர்ச்சனாவுக்கு வேலை மாற்றலாகி வேலூருக்கு செல்வார். சனிக்கிழமை சென்னை வந்து விட்டு திங்கட்கிழமை மறுபடியும் காலை வேலூருக்கு செல்லும் வகையில் அவரது வேலை இருக்கும்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த நிலையில்தான் ராதிகாவுடன் மோகனுக்கு நட்பு ஏற்படும். அந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாகிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். இந்த நிலையில் ராதிகா கர்ப்பம் ஆகிவிடுவார். அதே சமயத்தில் அர்ச்சனாவும் கர்ப்பம் ஆகிவிட இரண்டு மனைவிகளும் ஒரே மருத்துவமனையில் செக்அப் செய்ய வருவார்கள். அதேபோல் இரண்டு மனைவிகளுக்கும் ஒரே நேரத்தில் பிரசவ வலி ஏற்பட இரண்டு பேரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கிளைமாக்ஸ்.

rettai vaal kuruvi

ஒரு படத்தில் காமெடி காட்சிகள் என்பதை வசனங்களால் காண்பிக்க முடியும், உடல் மொழியால் காண்பிக்க முடியும். ஆனால் முதன் முதலாக ஒரு காமெடி காட்சியை காட்சிகளால் காண்பிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் தான் பாலு மகேந்திரா. ஒவ்வொரு காட்சியை பார்க்கும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும். அதுதான் பாலு மகேந்திராவின் மாயாஜாலம்.

இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘ராஜராஜ சோழன்’ என்ற பாடல் இன்றும் பலருடைய காலர் டியூனாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீசான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

rettai vaal kuruvi1

மோகன், அர்ச்சனா, ராதிகா, வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சி அசத்தலாக இருக்கும்.

இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்.. தேசிய விருது பெற்ற ‘வீடு’..!

மொத்தத்தில் வித்தியாசமான, ஆழமான அழுத்தமான படங்கள் எடுக்கும் பாலு மகேந்திரா ஒரு காமெடி படத்தையும் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது பெரிய விஷயம் தான். பின்னாளில் கிட்டத்தட்ட இதே கதைய அம்சம் கொண்ட ‘சதிலீலாவதி’ என்ற படத்தையும் பாலு மகேந்திரா இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...