இந்த ஆண்டு பட்டம் பெறுபவர்களுக்கு அடித்தது லக்.. 2 முன்னணி நிறுவனங்களின் முக்கிய அறிவிப்பு!

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீகம் காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களே ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இந்தியாவின் முன்னணி இரண்டு நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு பணியாளர்களை…

wipro job

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீகம் காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களே ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இந்தியாவின் முன்னணி இரண்டு நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு பணியாளர்களை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் ஒன்றேகால் லட்சம் புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு பட்டம் முடிக்கும் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு முன்னணி நிறுவனமான விப்ரோ சுமார் 8,000 ஊழியர்களை பணியில் அமத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் உள்பட உலகம் முழுவதும் வேலைநீக்க நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களும் மிகப்பெரிய லாபத்தில் இயங்கி வருவதால் மேலும் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக புதிய பணியாளர்களை பணியில் அமர்ந்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு பட்டம் முடித்து வெளியேறுபவர்களுக்கு உண்மையிலேயே இந்த இரண்டு நிறுவனங்களில் வேலை கிடைத்தால் நிச்சயம் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகத்தான் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.